என் சுவாசக்காற்றே, நரசிம்மா படத்தில் நடித்த நடிகையா இது.! பாத்தா ஷாக் அவீங்க.! புகைப்படம் உள்ளே.!

0
1230
Isha-narasimma

தமிழில் 1999 ஆம் ஆண்டு அரவிந்த் சாமி, பிரகாஷ் ராஜ், ரகுவரன் போன்றவர்கள் நடிப்பில் வெளியான படம் “என் சுவாச காற்றே ” இந்த படத்தில்அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடித்து தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை இஷா கோபிகர்.

1986 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்த இவர், முதலில் மாடலிங் துறையில் ஈடுபட்டிருந்தார். பின்னர் 1998 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான “சந்திரலேகா ” என்ற படத்தில் நடித்து திரை துறையில் அறிமுகமானார். அதன் பின்னரே இவருக்கு ‘என் சுவாச காற்றே’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதன் பின்னர் நடிகர் விஜய்யுடன் “நெஞ்சினிலே” விஜயகாந்த நடித்த “”நரசிம்மா” போன்ற படங்களில் நடித்தார். முன்னணி நடிகர்களுடன் நடித்து தமிழ் சினிமாவில் சிறந்த நடிகையாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இவர். சில ஆண்டுகள் கழித்து தமிழ் சினிமா உலகில் காணாமல் போனார். ஆனால், இந்தியில் இவருக்கு அடுத்ததடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன.

isha kopikar

isha actress

isha koppikar

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள புதிய படத்தில் நடிகை இஷா கோபிகர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். இந்த படத்தை “இன்று நேற்று நாளை ” படத்தை இயக்கிய ராம் குமார் எடுக்கவிருக்கிறார். இந்த படத்தின் மூலம் கிட்டத்தட்ட 17 ஆண்டுகள் கழித்து தமிழ் சினிமாவில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கவிருக்கிறார் நடிகை இஷா கோபிகர்.