எனை நோக்கிப் பாயும் தோட்டா’ நடிகர் தற்கொலை. ஒரு நாளைக்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட உடல். காரணம் என்ன?

0
1342
srivatsav
- Advertisement -

சின்னத்திரையிலும் சரி வெள்ளித்திரையிலும் சரி பிரபலங்களின் தற்கொலை ஒரு தொடர்கதையாக தான் இருந்து வருகிறது. அதிலும் கடந்த ஆண்டு பாலிவுட் நடிகர் சுஷாந்த் துவங்கி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சித்ரா வரை பல பிரபலங்களின் மரணம் மிகவும் மர்மமாகவே இருந்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் சினிமா மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்து வந்த இளம் நடிகர் ஸ்ரீவத்ஸவ் சந்திரசேகர் தற்கொலை செய்துக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-விளம்பரம்-

கடந்த ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் மற்றும் மேகா ஆகாஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ இந்த திரைப்படத்தில் தனுஷின் நண்பராக நடித்து இருந்தவர் தான் நடிகர் ஸ்ரீவத்ஸவ் சந்திரசேகர். மேலும், இவர் விகடன் டெலிவிஸ்டாஸ் தயாரிப்பில் ஒளிபரப்பாகி வரும் யூ-டியூப் சீரிஸான ‘வல்லமை தாராயோ’விலும் லோகேஷ் என்கிற கேரக்டரில் நடித்து வந்தார். இந்நிலையில் கடந்த புதன் கிழமை (பிப்ரவரி 3) ஷூட்டிங் செல்வதாக வீட்டிலிருந்து கிளம்பியவரை அதன்பிறகு வீட்டார் தொடர்பு கொள்ளவே முடியவில்லை.

- Advertisement -

பொதுவாக ஷூட்டிங் வந்துவிட்டால் போனை சுவிட்ச் ஆஃப் செய்து விடுவது ஸ்ரீவத்சவின் வழக்கமாம்.அதனால் அவர் படப்பிடிப்பில் இருப்பதாக வீட்டிலிருப்பவர்கள் நினைத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். புதன்கிழமை எந்தவொரு ஷூட்டிங்கும் இல்லாத நிலையில் படப்பிடிப்புக்கு செல்வதாக சொல்லிவிட்டு, சென்ற ஸ்ரீவத்ஸவ் தனது வீட்டுக்கு அருகிலேயே இருக்கும் அவருடைய இன்னொரு வீட்டில் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். அவர் தற்கொலை செய்துக் கொண்ட வீடு ஸ்ரீவத்சவின் தந்தை பிசினஸுக்காகப் பயன்படுத்தி வந்ததாக சொல்கிறார்கள்.

ஸ்ரீவத்சவ் சந்திரசேகர்

அந்த வீட்டில் ஸ்ரீவத்ஸவ் அடிக்கடி தனிமையில் இருப்பதை வழக்கமாக கொண்டிருந்ததாக நெருங்கிய வட்டாரத்தினர் தெரிவித்திருக்கிறார்கள். புதன்கிழமை தூக்கில் தொங்கியவரை அடுத்தநாள் தான் கண்டுப்பிடித்திருக்கிறார்கள்.ஸ்ரீவத்சவின் உடல் மீட்கப்பட்டு இறுதிச் சடங்குகளுக்குப் பின் இன்று அடக்கம் செய்யப்பட்டது. ஸ்ரீவத்சவ் சில மாதங்களாகவே மனநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகச் சொல்கிறார்கள்.  ஸ்ரீவத்சவின் அம்மா பிரபல மனநல மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement