அட, காலா ஈஸ்வரி ராவ்வின் கணவர் இந்த நடிகர் தானா – அர்ஜுனின் இத்தனை படங்களை இயக்கி இருக்கிறாரா.

0
3449
- Advertisement -

இயக்குனர் ப.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ‘காலா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இந்த படத்தில் இந்தி நடிகர் நானா படேகர் சமுத்திரகனி,வத்திக்குச்சி பட நாயகன் திலீபன், பிக் பாஸ் புகழ் சாக்ஷி அகர்வால், சாயாஜி சிண்டே, ஹுமா குரோஷி என்று பலர் நடித்திருந்தனர். மேலும், இந்த படத்தில் ரஜினியின் மனைவியாக நடித்தவர் நடிகை ஈஸ்வரி ராவ். இவரை காலா படத்திற்கு முன்பாகவே பல படங்களில் நடித்திருக்கிறார் நடிகை ஈஸ்வரி ராவ்.

-விளம்பரம்-

நடிகை ஈஸ்வரி ராவ் தமிழில், 1990 ஆம் ஆண்டு வெளியான ‘கவிதை பாடும் அலைகள்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல மொழகிகளில் கதாநாயகியாக நடித்துள்ளார். அவ்வளவு ஏன் நாளைய தீர்ப்பு படத்தில் இரண்டாம் ஹீரோயினாக கூட நடித்திருந்தார். மேலும், இவர் தனுஷ் நடிப்பில் வெளியான சுள்ளான் படத்தில் தனுஷின் அக்காவாக நடித்திருந்தார்.

- Advertisement -

ஈஸ்வரி ராவ் கணவர் :

ஆரம்பத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பின்னர் தனுஷுக்கு அக்காவாக நடித்து பின்னர் ரஜினிக்கே மனைவியாக நடித்தவர் இவர் மட்டுமாக தான் இருக்கும். இந்த நிலையில் நடிகை ஈஸ்வரியின் கணவர் எல்.ராஜா ஒரு இயக்குனர் என்பது பலரும் அறியாத ஓன்று தான். இவர் நடிகர் அர்ஜுன் நடித்த சங்கர் குரு, சொந்தக்காரன், தரைமேல் ஆணை உள்ளிட்ட படங்களையும், ரகுவரன் நடித்த குற்றவாளி என்ற படத்தையும் இயக்கியுள்ளார். மேலும் இவர் சில படங்களில் நடிக்கவும் செய்திருக்கிறார்.

இயக்கிய சீரியல்கள் :

மேலும் இவர் வெள்ளித்திரையில் மட்டும் இயக்குனராக இல்லாமல் சின்னத்திரையில் சில சீரியல்களையும் இயக்கி இருக்கிறார். ரட்சிதா மற்றும் அவரது கணவர் நடித்த “பிரிவோம் சிந்திப்போம்” என்ற சீரியல், சன் டிவியில் ஒளிபரப்பான உதிரி பூக்கள், தாமரை போன்ற பல சீரியல்களை இவர் இயக்கி இருக்கிறார். தற்போது நடிகை ஈஸ்வரியின் கணவர் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் “சுந்தரி” என்ற சீரியலை இயக்கி வருகிறார்.

-விளம்பரம்-

திருமணம் :

இந்நிலையில் நடிகை ஈஸ்வரி மற்றும் இயக்குனர் ராஜா கடந்த 2005ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார் என்பதும் குறிப்பிடதக்கது. இந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி வெளியான “கொன்றால் பாவம்” என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் வரலட்சிமி சரத்குமார் கதாபாத்தியாக நடித்துள்ள இப்படம் கலவையான விமர்சங்களை பெற்று வருவது குறிப்பிடதக்கது.

Advertisement