தமிழகத்தின் முதல்வராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். சினிமாவை தாண்டி விஜய் அரசியலில் இறங்கி இருக்கிறார். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்று கட்சியை தொடங்கி இரண்டு ஆண்டுகள் தான் ஆனது இவருடைய பேச்சு முழு அரசியல்வாதியாக இருக்கிறது என்று பலரும் பாராட்டிருந்தார்கள். இதை அடுத்து ஏப்ரல் 23ஆம் தேதி நடந்த தேர்தலில் தவெக கட்சி சார்பில் விஜய் அவர்கள் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். இதுவரை இல்லாத அளவிற்கு 85 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்ததாக அறிவித்திருந்தார்கள்.

பின் தேர்தல் முடிவில் 75 வருட திமுக, 50 வருட அதிமுக என எல்லா கட்சியையும் தவெக கட்சி கதி கலங்க வைத்தது. தமிழகத்தில் 108 இடங்களில் வெற்றி பெற்று முன்னிலையில் தவெக கட்சி இருந்தது. இது மிகப்பெரிய வரலாற்று சாதனையாகவே பார்க்கப்பட்டது. இதை அடுத்து பிரபலங்கள், நடிகர்கள், ரசிகர்கள், அதிகாரிகள் என பலருமே விஜய்க்கு வாழ்த்துக்களை கூறி இருந்தார்கள். இதை அடுத்து பெரும்பான்மை எம்எல்ஏக்கள் பெற்று முதலமைச்சர் ஆனார்.
விஜய் அரசியல்:
முதல்வர் விஜய் அவர்கள் தங்களின் பணியை சிறப்பாக செய்து கொண்டு வருகிறார்கள். இது ஒரு பக்கம் இருக்க திருச்சி கிழக்கு தொகுதியில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர், முதல்வர் விஜய் அவர்கள் ராஜினாமா செய்திருக்கிறார். இதை அடுத்து அந்த தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. அதில் தவெக சார்பாக நடிகர் ராகவா லாரன்ஸ் போட்டியிட போவதாக கடந்த சில தினங்களாகவே சோசியல் மீடியாவில் தகவல்கள் வந்து பண்ணம் இருக்கின்றது.

லாரன்ஸ் பதிவு:
இந்த நிலையில் இது தொடர்பாக நடிகர் ராகவா லாரன்ஸ் அதிகாரப்பூர்வ பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், நான் திருச்சி கிழக்கு தொகுதி தேர்தலில் போட்டியிடப் போவதாக பல்வேறு சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றது. என்னுடைய ஊடக நண்பர்கள் பலருமே இது தொடர்பாக விளக்கம் கேட்டு என்னை தொலைபேசி வாயிலாகவும், நேரில் சந்திக்கவும் தொடர்ந்து பேசிக் கொண்டு வருகிறார்கள்.
சர்ச்சைகளுக்கு விளக்கம்:
இந்த தகவல்களுக்கு நான் கட்டாயம் விளக்கம் அளிக்கக்கூடிய ஒரு நிலையில் இருக்கிறேன். இந்த தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவும் விரும்புகிறேன். நான் இப்போது பென்ஸ் படத்தினுடைய படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறேன். என்னுடைய இந்த ஷெட்டில் வரும் பத்தாம் தேதியுடன் முடிகிறது. என்னுடைய தாயார் ஆசிர்வாதத்துடன் என்னுடைய வாழ்க்கை குறித்த ஒரு முக்கியமான முடிவை வரும் 11ஆம் தேதி வியாழக்கிழமை 9.30 மணிக்கு அறிவிக்கப்படும் என்று கூறியிருக்கிறார்.






