முதன் முறையாக வைரலாகும் எதிர் நீச்சல் குணசேகரனின் ரொமான்ஸ் வீடியோ – நெட்டிசன்களின் கமண்ட்ஸ்.

0
3148
Marimuthu
- Advertisement -

சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீரியலை திருச்செல்வம் இயக்கி வருகிறார்.அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமையையும் மையமாக கொண்ட கதை. மேலும், மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பி வாழுகிறார்கள்.

-விளம்பரம்-

இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் பெண்களாக கருதி வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள்.அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள்.

- Advertisement -

இப்படி இருக்கும் நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. இதனால் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். இப்படி ஒரு நிலையில் ஆதிரைக்கும் கரிகாலனுக்கு திருமணம் முடிந்து இந்த சீரியலில் மிகப்பெரிய ட்விஸ்ட் வந்து இருக்கிறது.

அதே போல இந்த சீரியலின் ஆதி குணசேகரன் கதாபாத்திரமும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்து இருக்கிறது. இந்த சீரியலில் ஆரம்பித்த செய்தல் ஆதி குணசேகரன் கதாபாத்திரம் என்று பெயர் எடுத்தாலும் நாட்கள் செல்ல செல்ல இவரது வீடியோக்கள் எல்லாம் சமூக வலைதளங்கள் வரை காரணமாக பரவியது. அதுவும் இவர் அடிக்கடி சொல்லும் இந்தாம்மா ஏய் என்ற வசனம் பெரும் வைரலனது.

-விளம்பரம்-

இந்த தொடரில் ஆதி குணசேகரன் ஆரம்பத்தில் சாருபாலா மீது விருப்பம் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவார். ஆனால், அவர் படிக்காதவன் என்பதால் அவரை திருமணம் செய்த மறுத்து விடுவார் சரு. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் வெளியான எபிசோடு ஒன்றில் சாரு மற்றும் ஆதி குணசேகரன் இருவரும் சந்தித்து பேசி இருப்பார்கள். அதிலிருந்து எடிட் செய்து ஆதி குணசேகரன் ரொமான்ஸ் செய்வது போல வீடியோ ஒன்று வைரலானது.

இந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து ஆதி குணசேகரனுக்கு ரொமான்ஸ் எல்லாம் வருமா என்று வியந்து வருகிறார்கள். தமிழ் சீரியலை பொறுத்த வரை பாக்கியலட்சுமி கோபியின் ரோமன்ஸ் காட்சிகள் தான் அடிக்கடி வைரலாகும் ஆனால், முதல் முறையாக ஆதி குணசேகரின் ரொமான்ஸ் வீடியோ இப்படி வைரலாவது இதுவே முதன் முறை.

Advertisement