அஜித்காக எழுதி பாடலில் மாஸ் காட்டியுள்ள ரஜினி – ஜெயிலர் நடிகர் எதிர் நீச்சல் மாரிமுத்து சொன்ன சீக்ரெட்

0
1834
Rajini
- Advertisement -

அஜித்துக்காக அழுத்திய பாடலில் ரஜினி நடனமாடியது குறித்து எதிர்நீச்சல் மாரிமுத்து அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமையும் மையமாக கொண்ட கதை.

-விளம்பரம்-

தற்போது இந்த சீரியல் பல அதிரடி திருப்பங்களுடன் சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த சீரியலில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக அசத்தி வருபவர் நடிகர் மாரிமுத்து. சீரியலில் இவர் மதுரை ஸ்லாங்கில் பேசி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருக்கிறார். இந்த சீரியலின் வெற்றிக்கு மாரிமுத்துவும் ஒரு காரணம் என்று சொல்லலாம். இந்தம்மா ஏய் என்ற டிரேட் மார்க்கிற்குச் சொந்தக்காரர் மாரிமுத்து. மேலும், இவர் சீரியலில் நடிப்பதற்கு முன் பாடலாசிரியர் வைரமுத்து விடம் உதவியாளராக பணியாற்றி இருந்தார்.

- Advertisement -

மாரிமுத்து திரைப்பயணம்:

அது மட்டும் இல்லாமல் இவர் இயக்குனர்கள் ராஜ்கிரண், வசந்த், எஸ்.ஜே சூர்யா போன்ற பல இயக்குனர்களிடமும் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். அதன் பின் மாரிமுத்து “கண்ணும் கண்ணும்” என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. அதற்குப் பிறகு இவர் குணச்சித்திர நடிகராகவும் பல படங்களின் நடித்து இருக்கிறார். இருந்தாலும், சன் டிவி எதிர்நீச்சல் மூலம் தான் மாரிமுத்து பிரபலமானார்.

மாரிமுத்து குறித்த தகவல்:

இவருடைய நடிப்பு தீனிக்கு விருந்தாக அமைந்தது தான் எதிர்நீச்சல் சீரியல். தற்போது இவர் இந்தியன் 2 படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். அதேபோல் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ஜெயிலர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மாரிமுத்து நடித்திருக்கிறார். இந்த படம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா வரலாற்றிலேயே இதுவரை செய்யாத வசூல் சாதனையை ஜெயிலர் படம் செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

மாரிமுத்து அளித்த பேட்டி:

மேலும், சோசியல் மீடியா முழுவதும் ஜெயிலர் படம் குறித்த செய்திகள் தான் உலா வந்து கொண்டு இருக்கிறது. இந்நிலையில் ஜெயிலர் படம் தொடர்பாக மாரிமுத்து அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், ரஜினி நடித்த பாட்ஷா படத்தில் வெளிவந்த ஸ்டைலு ஸ்டைலு தான் பாடல் முதலில் நடிகர் அஜித்திற்கு தான் போடப்பட்டது.

ரஜினி-அஜித் குறித்து சொன்னது:

ஆசை படத்தில் அஜித் நடித்திருந்தார். அந்தப் படத்தின் இயக்குனர் வசந்த். அவரிடம் நான் உதவி இயக்குனராக பணியாற்றி இருந்தேன். அப்போதுதான் ஸ்டைலு ஸ்டைலு என்ற பாடலை இசையமைப்பாளர் தேவா போட்டு கொடுத்தார். ஆனால், இயக்குனர் வசந்த் சற்று மெல்லிசையாக பாடல் வேண்டும் என்று கேட்டதனால் தான் மீனம்மா என்ற பாடலை மாற்றி போட்டுக் கொடுத்தார் தேவா என்று கூறியிருக்கிறார்.

Advertisement