சினிமாவில் நடிக்கும் நட்சத்திரங்களுக்கு இணையான தற்போது சின்னத்திரையில் நடிக்கும் நட்சத்திரங்களுக்கும் ரசிகர்கள் அதிகமாகிவிட்டனர். மேலும் பொதுவான பொது கருத்தை மையமாக கொண்டு உருவாக்கப்படும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மிகவும் அதிகமாக இருப்பார்கள். அந்த வகையில் பெண் விடுதலையை மையப்படுத்தி சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கிறது. இந்த சீரியலில் தொடக்கத்தில் அமைதியாக இருந்த பட்டம்மாள் கதாபாத்திரம் தற்போது விஸ்வரூபம் எடுத்து ரசிகர்களின் விருப்ப கதாபாத்திரமாக இருந்து வருகிறார்.
பட்டம்மாள் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகையின் பெயர் பாம்பே ஞானம். இவர் இந்த சீரியலில் கதாநாயகியான ஜனனி கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை மதுமிதாவுக்கு உறுதுணையாக இருந்து வீட்டை ஆட்டிப்படைத்தது வருகிறார். இதனாலேயே இவரின் கதாபாத்திரம் சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது எதிர்நீச்சல் சிரியலில் நடித்து வரும் இவர் நிஜவாழ்க்கையிலும் எதிர்நீச்சல் போட்டவர்தான்.
சிறுவயதில் இருந்தே மேடை நாடகங்களில் ஈர்ப்பு ஏற்பட்ட இவருக்கு முழுவதுமாக அவருடைய கணவர் உதவி செய்து வந்திருக்கிறார். அப்படியிருக்கும் போது கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் அவருடைய கணவர் காய்ச்சல் என்று மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்துள்ளார். மருத்துவமனைக்கு வந்த சில நாட்களில் காய்ச்சல் குணமாகாமல் இருக்கவே தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருக்கின்றனர். ஆனாலும் நாளுக்கு நாள் காய்ச்சல் நீடித்துக்கொண்டே சென்றிருக்கிறது.
மேலும் மருத்துவர்கள் பல பரிசோதனைகள் செய்யவேண்டும் என்று மருத்துவமனையிலேயே இருக்க வைத்திருக்கின்றனர். அதோடு தினமும் மருத்துவத்திற்காக அப்போதே 60 ஆயிரம் ரூபாய் வந்திருக்கிறது. இந்நிலையில் சில நாட்களில் அவரது கணவர் கோமா நிலைக்கு சென்றிருக்கினார். ஆனால் மருத்துவர்களை தொடர்ந்து பல பரிசோதனைகள் செய்யவேண்டும், பரிசோதைக்காக அமெரிக்க அனுப்ப வேண்டும் என்று சொல்லி இவரிடம் காசை கரந்திருக்கின்றனர்.
இந்நிலையில் ஒரு மாததிற்கும் மேலாக கோமாவில் இருந்த இவரது கணவர் ICU விற்கு மாற்றப்பட்டுள்ளார். ஆனாலும் சில நாட்களில் சிகிச்சை பலனளிக்காமல் இவரது கணவர் இறந்துவிட்டார். காய்ச்சல் என்று நடந்தது வந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற இவரது கணவர் பின்னர் கோமாவிற்க்கு சென்று இறந்ததிற்கு தன்னால் ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டதே என்ற குற்ற உணர்ச்சி வெகுநாளாக பாம்பே ஞானத்திற்கு இருந்து வந்துள்ளது. இதனாலேயே பல வருடங்கள் நடிக்காமல் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் எதிர்நீச்சல் சிரியலில் நடிக்க தன்னிடம் 8 மாதங்களாக தொடர்ந்து கேட்டுகொண்டே இருந்ததால்தான் இந்த சீரியலில் நடிக்க வந்ததாக கூறியிருந்தார். மேலும் உடல்நிலை சரியில்லை என்று மருத்துவமனைக்கு சென்றால் அவர்கள் கூறுவதை அப்படியே நம்பிவிட வேண்டாம் என்றும் மேலும் இரண்டு மூன்று இடங்களில் விசாரித்து பின்னர் முடிவுக்கு வாருங்கள் என்று கூறியிருந்தார். மேலும் இவர் அவ்வை சண்முகி, ஆஹா, ஏய் நீ ரொம்ப அழகா இருக்க, ஒருநாள் ஒருகனவு, ஜிகர்தண்டா, வெய்யில் அழகிய தமிழ்மகன், நள தயமயந்தி போன்ற திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.