பிறந்த நாளில் தன் காதலனை அறிமுகம் செய்த எதிர்நீச்சல் சீரியல் நடிகை- யாருன்னு நீங்களே பாருங்க.

0
262
vaishnavi
- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல் நடிகை தன்னுடைய காதலை முதன் முதலாக அறிமுகம் செய்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது. இந்த சீரியலை திருச்செல்வம் இயக்கி வருகிறார். அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமையையும் மையமாக கொண்ட கதை.

-விளம்பரம்-

மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன் தம்பி வாழுகிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்களை எல்லாம் வீட்டு வேலை செய்யும் பெண்களாக கருதி வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள். அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள்.
இப்படி இருக்கும் நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. இதனால் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள். தற்போது சீரியலில் குணசேகரன் தன்னுடைய தங்கை ஆதிரைக்கு பிடிக்காத மாப்பிள்ளையை திருமணம் செய்து வைக்க நினைக்கிறார். இந்த திருமணத்தில் வீட்டில் உள்ள யாருக்குமே விருப்பமில்லை.

சீரியலின் கதை:

அனைவருமே இந்த திருமணம் வேண்டாம் என்று போராடுகிறார்கள். ஆனால், குணசேகரன் தான் நினைத்தது தான் செய்வேன் என்று பிடிவாதமாக இருக்கிறார். இதனால் ஆதிரை தூக்க மாத்திரை சாப்பிட்டு சீரியசான நிலைமையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதை அறிந்தும் குணசேகரன் மனம் மாறாமல், அவள் பிழைத்தால் கல்யாணம் இல்லை என்றால் பாடை என்று பேசிக்கொண்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

வைஷ்ணவி குறித்த தகவல்:

ஆதிரை பிழைப்பாளா? ஆதிரைக்கும் அருணுக்கும் திருமணம் நடக்குமா? இந்த முயற்சியில் ஜனனி ஜெயிப்பாரா? குணசேகரன் ஜெயிப்பாரா? என்று பல திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியல் நடிகை தன்னுடைய காதலனை அறிமுகம் செய்திருக்கும் தகவல் வைரலாகி வருகிறது. அதாவது, இந்த சீரியலில் வாசு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை வைஷ்ணவி. இந்த சீரியலில் இவர் தைரியமான பெண்ணாக, தன்னுடைய கருத்துக்களை சுதந்திரமாக சொல்லும் பெண்ணாக வலம் வருகிறார்.

வைஷ்ணவி காதலன்:

இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்த நிலையில் இவர் சமீபத்தில் தன்னுடைய பிறந்தநாளை கோலாகலமாக கொண்டிருக்கிறார். இவருடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வைஷ்ணவி தன்னுடைய காதலரை அறிமுகம் செய்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் தன் காதலனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் வைஷ்ணவிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement