முடிய போகும் எதிர்நீச்சல் சீரியல், பிரபலங்கள் பகிர்ந்த கடைசி நாள் ஷூட்டிங் புகைப்படம்-காரணம் இது தான்

0
604
- Advertisement -

எதிர்நீச்சல் சீரியலின் கடைசி நாள் சூட்டிங் புகைப்படம் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் பட்டிதொட்டி எங்கும் பேமஸ் என்றால் அது எதிர்நீச்சல் தான். இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த சீரியல் கடந்த 2022-ம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டது. இந்த சீரியலில் மதுமிதா, சபரி பிரசாந்த், கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா இசை, சத்யபிரியா, கமலேஷ், பம்பாய் ஞானம், வேல ராமமூர்த்தி உட்பட பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

இந்த சீரியல் முழுக்க முழுக்க ஒரு பெண் அடிமைத்தனத்திலிருந்து வெளியே வரவேண்டும் என்பதை மையமாக வைத்து இயக்குனர் கொடுத்திருக்கிறார். மேலும், சீரியலில் மதுரையில் கூட்டு குடும்பமாக அண்ணன், தம்பிகள் வாழ்கிறார்கள். இந்த கூட்டு குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டு இருக்கிறார்கள். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்கள் எல்லாம் வீட்டு வேலை செய்யும் வேலைக்காரர்களாக நடத்தி வருகிறார்கள்.

- Advertisement -

எதிர்நீச்சல் சீரியல்:

அதுவும் அதிகம் படித்த பெண்களை தேடி சென்று திருமணம் செய்கிறார்கள். அவர்களை எதிர்த்து எந்த கேள்வியும் கேட்க முடியாமல் அந்த பெண்களும் அமைதியாக இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் ஜனனி இந்த வீட்டின் கடைசி மருமகளாக வருகிறார். இவர் அங்கு நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்கிறார். இதனால் வீட்டில் பல பிரச்சனைகள் நடக்கிறது. பின் மற்ற பெண்களும் தங்களின் உரிமையை கேட்டு போராடுகிறார்கள்.

சீரியல் கதை:

கடந்த சில மாதங்களாகவே சீரியலில் தர்ஷினியை எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று குணசேகரன் பல திட்டங்களை போட்டு வந்தார். ஒரு கட்டத்தில் இவர் தன்னுடைய மகளை கடத்தி விட்டார். = எப்படியோ போராடி தர்ஷினியை மீட்டு விட்டார்கள். அதற்குப் பின்பு தர்ஷினி தன்னுடைய கனவை நோக்கி பயணிக்கத் தொடங்கி விட்டார். பின் வீட்டில் உள்ள பெண்களுமே தங்களுடைய கனவை நோக்கி போராட தொடங்கினார்கள்.

-விளம்பரம்-

கடைசி நாள் ஷூட்டிங்:

இன்னொரு பக்கம் கதிர், ஞானம் இருவருமே திருந்தி தன்னுடைய அண்ணனுக்கு எதிராகவே நிற்கிறார்கள். இப்படி எல்லோருமே குணசேகரனுக்கு எதிரே நிற்பதால் அனைவரையும் அழித்துவிட வேண்டும் என்று குணசேகரன் திட்டமிடுகிறார். இப்படி இருக்கும் நிலையில் திடீரென்று குணசேகரனை போலீஸ் கைது செய்து விட்டது. தான் செய்த குற்றங்களை ஒப்புக்கொண்டு குணசேகரன் திருந்துவாரா? என்ன செய்யப் போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

வைரலாகும் புகைப்படம்:

இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்து இறந்ததில் இருந்தே சீரியல் டிராக் எங்கெங்கோ சென்று கொண்டிருக்கின்றது. டிஆர்பியிலும் பின்தங்கி இருக்கிறது. இதனாலேயே சீரியலை முடிவுக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. ஆகவே, வருகிற ஜூலை எட்டாம் தேதியுடன் சீரியல் முடிவடைய இருப்பதாக தகவல் வெளியாக இருக்கிறது. இதனால் சீரியலில் நடித்த பிரபலங்கள் பலரும் தங்களுடைய கடைசி நாள் சூட்டிங் போது எடுத்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் ஷேர் செய்து தங்களுடைய பழைய நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள்.

Advertisement