இயக்குநரும், நடிகருமான கே. பாக்யராஜின் மறைவு தமிழ் திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கு மேலாக திரைக்கதை, வசனம், இயக்கம், நடிப்பு என்று பல துறைகளில் சாதித்து தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர் பாக்கியராஜ். இவர் தமிழ் சினிமாவிற்கு ஏராளமான படைப்புகளை கொடுத்திருக்கிறார். இவருடைய தனித்துவமான கதையும் இயல்பான நடிப்பும் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடத்தை பிடித்திருக்கிறது.

இவரை திரைக்கதை மன்னன் என்று பலரும் அழைத்தார்கள். மேலும், கடந்த 27 ஆம் தேதி பாக்கியராஜ் வாக்கிங் சென்று வந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு கீழே மயங்கி விழுந்திருந்தார். இவரை குடும்பத்தினர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தார்கள். ஆனால், சிகிச்சை பலனின்றி பாக்யராஜ் இறந்தார். சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலருமே நேரில் சென்று பாக்யராஜுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.
பாக்யராஜின் மறைவு:
அதோடு பாக்யராஜின் மறைவுக்கு முதல்வர் விஜய் அரசு மரியாதை அறிவித்து இருந்தார். 28ஆம் தேதி பாக்யராஜின் உடல் அரசு மரியாதை உடன் தகனம் செய்யப்பட்டது. இப்படி இருக்கும் நிலையில் தற்போது பாக்யராஜினுடைய அலுவலக சமூக வலைத்தள கணக்கிலிருந்து கடிதம் ஒன்று வெளியாகியிருக்கிறது. அந்த கடிதத்தில், சந்தோஷத்தில பெரிய சந்தோஷம் மத்தவங்களை சந்தோஷப்படுத்திப் பாக்குறது” நான் எழுதிய இந்த வாக்கியத்தை, என் வாழ்க்கையின் பெரிய சந்தோஷமாக்கிய என் கோடானு கோடி ரசிகர்களையும், தங்கமான தாய்மார்களையும், திரையுலக நண்பர்களையும் என் கண்ணுக்குக் கண்ணாகவே மதிக்கிறேன்.

அலுவலக கடிதம்:
அதனால்தான் என் கண்களை மட்டும் உங்கள் அன்பான பார்வைக்கு விட்டுவிட்டு வந்திருக்கிறேன். பார்த்துக் கொள்ளுங்கள் பத்திரமாக, அப்படியே என் கண்மணி சாந்தனுவின் வெற்றிக்கு உங்கள் கைதட்டல் ஆசீர்வாதமாக இருக்க விரும்புகிறேன். என் ஸ்தானத்தில் இனி ரசிகர்களாகிய நீங்கள் இருந்து சாந்தனுவின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க வேண்டுகிறேன். நானும் என் விழி வழி உங்கள் அனைவரையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

எமோஷனல் பதிவு:
“இருக்கிறேன்” பார்த்தீர்களா? இன்னும் கண்தானம் செய்பவர்கள் இல்லாத போதும் இருப்பார்கள் பார்வையாய்! வரும்போதே expiry date குறிக்கப்படாத உடல் இது. என்றாவது ஒரு நாள் அது தீக்குள்ளோ மண்ணுக்குள்ளோ கிருகப்பிரவேசம் செய்துவிடும். எஞ்சுவது கொஞ்சமாய் அஸ்தியும், மிதமிஞ்சிய அன்பே ஆஸ்தியாயும். என் இறுதி யாத்திரையில் நீங்கள் அனைவரும் காட்டிய அன்பில், கண்ணீரில், கருணையில் என் ஆத்மா சாந்தியடைந்துவிட்டது. இனி நான் நல்ல சினிமாவில், நல்ல திரைக்கதையில், நல்ல மனித மாண்புகளில் உயிர்ப்பாய் இருப்பேன் என்று கூறி இருக்கிறார்.






