சாமி 2 படம் பற்றி வெளிவந்த புதிய Update.!

0
608
saami-2-movie

தமிழில் கடந்த 2003 ஆம் ஆண்டு இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான “சாமி’ படம் மாபெரும் ஹிட்டானது. நடிகர் விக்ரம் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.

saamy-2

மேலும், இந்த படத்தின் இரண்டாம் பாகத்தின் ட்ரைலர் கடந்த ஜூன் 3 ஆம் தேதி வெளியானது. அதில் முதல் பாகத்தில் நடித்திருந்த த்ரிஷாவை தவிர மற்ற அனைவரும் இடம்பெற்றிருந்தனர். இந்த படத்தில் நடிகர் விக்ரம் ,அப்பா மற்றும் மகன் வேடத்தில் நடிக்கிறார். இதில் அப்பா விக்ரம் மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். படத்தின் ட்ரைலர் வெளியாகி இரண்டு மாதத்திற்கு மேலான நிலையில் படத்தை பற்றிய எந்த ஒரு தகவலும் வெளிவராமல் இருந்தது.

இந்நிலையில் “சாமி 2 ” படத்தை பற்றிய அடுத்த அப்டேட் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் வரும் செப்டம்பர் மாதம் திரைக்கு வரவிருக்கறது. மேலும், இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் 90 சதவீதற்கு மேல் முடித்து விட்டதாகவும் அதில் ஒரு சில பகுதிகளின் வெளியிட்டு உரிமத்தையும் வழங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

saami-2

மேலும், செங்கல்பட்டு பகுதியின் வெளியிட்டு உரிமத்தை வொல்மார்ட் நிறுவனத்திற்கு அளித்துள்ளனர். தற்போது வந்த தகவலின்படி “சாமி 2 ” படத்தினை படக்குழூவும், தயாரிப்பு குழுவும் பார்த்து விட்டு மிகவும் பிரமித்து போனதகவும், படம் எப்போது வெளியாகும் என்று ஆவலுடன் காத்தூக் கொண்டிருக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது. எனவே, சாமி 2 படம் வழக்கமான ஹரி ஸ்டைலில் ஒரு காமெற்சியால் என்டர்டைனர் படமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.