உங்களுக்கு மதுவை ஞாபகம் இருக்கா ? அவரது Biopicல் நடிக்க இருந்த பஹத் பாசில், First Look இதோ (ஆனா, அந்த படம் நின்று போன காரணம் இதான்.)

0
851
madhu
- Advertisement -

அடித்துக் கொலை செய்யப்பட்ட ஆதிவாசி மதுவின் வாழ்க்கையை படமாக எடுக்கிற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கேரளாவில் அரிசி திருடியதாக கூறி ஆதிவாசி இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி பகுதியில் வசித்து வந்தவர் ஆதிவாசி இளைஞர் மது. இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர் முக்காலி பகுதியில் கையில் ஒரு பையுடன் சென்றிருக்கிறார். இதனை பார்த்த அப்பகுதியினர் அவர் கடையில் இருந்து அரிசி திருடியதாக கூறி அவரை கட்டி வைத்து சரமாரியாக தாக்கி இருந்தனர். தாக்கும் போது அந்த கும்பலில் இருந்த சிலர் செல்பி மற்றும் வீடியோக்களை எடுத்து இருந்தனர்.

-விளம்பரம்-

பின் சம்பவ இடத்திற்கு போலீஸ் விரைந்து வந்து மதுவை கைது சென்று காவல் நிலையத்திற்கு சென்று இருந்தார்கள். ஆனால், அழைத்துச் செல்லும் வழியிலேயே இளைஞர் மது பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், இளைஞர் தாக்கப்படும் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் எல்லாம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி இருந்தது. இதனையடுத்து இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது. அதுமட்டும் இல்லாமல் இறந்த மதுவை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இருந்தனர். அப்போது பிரேத பரிசோதனை அறிக்கையில் இறந்த மதுவின் வயிற்றில் ஒரு பருக்கை கூட உணவில்லை என்று தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் உத்தரவிட்டிருந்தார்.

- Advertisement -

ஆதிவாசி இளைஞர் மது கொலை:

இந்த கொடூர சம்பவம் 2018 ஆம் ஆண்டு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வரை இது தொடர்பாக 7 பேரை மட்டும் போலீசார் பிடித்து இருக்கின்றனர். இந்த வழக்கில் 16 பேர் குற்றம்சாட்டப்பட்டு இருந்தனர். அவர்கள் மீது கொலை மற்றும் பழங்குடியினர் வன்முறைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், போலீஸ் இந்த வழக்கை எடுத்து விசாரணை நடத்த தாமதம் செய்வதாக கூறப்படுகிறது. இதனிடையே பழங்குடியினர் நிலத்தையும், உரிமைகளையும் பறித்து கொண்டு அவர்களின் உயிரையும் படிக்கிறோமோ? என்று கேரளாவில் கடும் சர்ச்சைகள் எழுந்து இருந்தது.

மது வழக்கின் நிலை:

இந்த சம்பவம் தொடர்பாக திரையுலக பிரபலங்கள், பொது மக்கள் என பலரும் குரல் கொடுத்திருந்தனர். இந்த வழக்கு நான்கு வருடங்களாகியும் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. இன்னும் ஏன் விசாரணையை ஆரம்பிக்க வில்லை என்றும் தெரியவில்லை? இதுகுறித்து சோசியல் மீடியாவில் பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது. மேலும், இது தொடர்பாக மதுவின் தாய் மல்லி பேட்டி ஒன்றும் அளித்திருந்தார். அதில் அவர், காட்டில் புலி சிங்கம் கூட என் மகனை ஒன்னும் பண்ணல ஆனா, இந்த மனுசங்க அடிச்சி கொன்னுட்டானுங்க, என் மகன் கொலை வழக்கில் விசாரணையை ஆரம்பிக்கவே இல்லை. வல்துறையினர் வெவ்வேறு காரணங்களை அடுக்குகிறார்கள். என்னிடம் பணமோ செல்வாக்கோ இல்லை.

-விளம்பரம்-

ஆதிவாசி மது வழக்கு தொடர்பான தகவல்:

குற்றம் சாட்டப்பட்ட அனைத்து நபர்களும் இத்தனை ஆண்டுகளாக சுதந்திரமாக திரிந்து கொண்டிருக்கிறார்கள்.யாரை சந்தித்து நியாயம் கேட்பது என்று எனக்கு தெரியவில்லை என்று மனவேதனையுடன் கண்ணீருடன் சொல்லியிருந்தார். அதுமட்டும் இல்லாமல் இதுதொடர்பாக ஆஜரான பல வழக்கறிஞர்களும் விலகி விட்டார்கள். ஆரம்பத்திலிருந்தே இந்த வழக்கு பின்னடைவை சந்தித்து வருவதற்கு அரசியல் செல்வாக்கு முக்கிய பங்கு என்று சொல்லப்படுகிறது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இருக்கும் பெரும்பாலான நபர்கள் ஆளும்கட்சியின் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.

பகத் பாசில் நடிக்கும் படம்:

இப்படி இந்த வழக்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் இது தொடர்பான படம் ஒன்று உருவாக இருக்கிறது. இந்த படத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் பகத் பாசில் நடிக்க இருந்தார். இந்த படத்திற்கு மது 703 என்று பெயர் வைக்கப்பட்டு First Look கூட வெளியாகி இருந்தது. ஆனால், இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் இந்த படத்தை வெளியிடக்கூடாது என்றும் இது தொடர்பாக எந்த தகவலும் தெரியப்படுத்த கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்கள்.ஏனென்றால் , இந்த படம் வந்தால் வழக்கின் நோக்கம் திசை மாறும் என்று கூறப்படுகிறது. ஆகையால் படத்தின் போஸ்டர் மட்டும் வெளியாகி இருக்கிறது. அதில் பகத் பாசில் பார்ப்பதற்கு அப்படியே ஆதிவாசி மது போல் இருக்கிறார்.

Advertisement