பொதுவாகவே பெண்கள் மற்றும் ஆண்கள் எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல் மிக அதிக அளவு உபயோகப்படுத்துவது அழகு சாதன பொருட்கள் தான். அதிலும் இந்தியா முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் ஆண்கள் அதிக அளவு பயன்படுத்தும் அழகு சாதனப் பொருள் ஃபேர் அண்ட் லவ்லி. இது ஒரு இந்துஸ்தான் லீவர் நிறுவனத்தின் தயாரிப்பு. பலர் தன்னுடைய அழகை கூட்டுவதற்காக இதை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பல ஆண்டுகாலமாக புதுப்புது வித்தியாசமான விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது இந்துஸ்தான் லீவர் நிறுவனம்.

இந்நிலையில் இந்துஸ்தான் லீவர் நிறுவனம் தங்களது பொருளின் பெயரில் உள்ள ’ஃபேர்’ என்ற வார்த்தையை பயன்படுத்துவதை நிறுத்தப்போவதாக தெரிவித்துள்ளது. உலகளாவிய நுகர்வோர் நிறுவனமாக இந்துஸ்தான் யூனிலீவர் செயல்பட்டு வருகிறது. சருமம் மிளரும் அழகு கிரீமான ‘ஃபேர் அண்ட் லவ்லி’ கறுப்பு நிற சருமத்தினை சிவப்பு நிறமாக மாற்றுவது என்று கூறப்படுகிறது. இதனால் தவறான நம்பிக்கையை ஊக்குவிக்கும் விதமாக உள்ளதாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதைத்தொடர்ந்து இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் தன்னுடைய நிறுவன பொருள் ஆன ஃபேர் அண்ட் லவ்லி பெயரை மாற்றப்படுவதாக கூறப்படுகிறது. இது குறித்து இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் தரப்பில் கூறியது, எங்களது பொருளின் பெயரில் உள்ள ‘ஃபேர்’ என்ற வார்த்தையை பயன்படுத்துவதை நிறுத்த உள்ளோம். உலகம் முழுவதும் கருப்பின மக்களின் மீது நடத்தப்படும் வன்முறைக்கு எதிராக பல போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த போராட்டம் அமெரிக்காவில் தொடங்கி தற்போது உலகம் முழுவதும் பல நாடுகளில் வெடித்துக் கொண்டிருக்கிறது. கருப்பு என்பது அழகு குறைவது இல்லை.

ஆனால், ஃபேர் அண்ட் லவ்லி சிவப்பாக மாறி அழகு தரும் என பொருள் தரும்படி உள்ளதால் இந்த முடிவை இந்துஸ்தான் நிறுவனம் எடுத்துள்ளது. இந்த கிரீம்மின் புதிய பெயர் ஒழுங்குமுறை ஒப்புதலுக்காக் காத்திருக்கிறோம். இந்த மாற்றம் சில மாதங்களில் நடைமுறைக்கு வர உள்ளது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இது குறித்து யூனிலீவரின் அழகு மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு பிரிவு தலைவர் சன்னி ஜெயின் கூறியது, நிறமான, வெள்ளையான மற்றும் ஒளிரும் போன்ற சொற்களின் பயன்பாடு அழகுக்கான ஒரு தனித்துவமான அர்தத்தை பரிந்துரைக்கிறது என்பதை நாங்கள் உணர்கிறோம். அது சரியானது என்று நாங்கள் நினைக்கவில்லை. இதை நாங்கள் நிவர்த்தி செய்ய விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement