பிளே ஸ்டோரில் அதள பாதாளம் சென்ற டிக் டாக். காரணம் இந்த நபர் போட்ட இந்த ஒரு வீடியோ தானா ?

0
8335
tiktok
- Advertisement -

இந்தியாவில் டிக் டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என்று இளைஞர்கள் பலர் கோரிக்கை வைத்து உள்ளனர். அதிலும் டுவிட்டரை பயன்படுத்தும் பயனர்கள் டிக் டாக்கை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு ஹாஸ்டேக்குகளை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். இதன் விளைவாக கூகுள் ப்ளே ஸ்டோரில் டிக் டாக் பயன்பாட்டின் மதிப்பீடு தற்போது குறைந்துள்ளன. மேலும், டிக் டாக்கை தடை செய்ய வேண்டும் என்று தற்போது 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ட்விட்டுகள் நாடு முழுவதும் பரவியுள்ளது. அதோடு இந்த பிரச்சனை மிக பிரபலமான இரண்டு செயலிகளான டிக் டாக் மற்றும் ட்விட்டர் பயனர்கள் இடையே உருவான வாக்குவாதத்தில் ஏற்பட்டது.

-விளம்பரம்-

இப்போது நாடு முழுவதும் இந்த பிரச்சனை சர்ச்சையாக மாறி உள்ளது. தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் டிக் டாக் பயன்பாட்டினை 4.6 முதல் 1.3 வரை குறைத்துள்ளனர். இவ்வளவு பிரச்சினைக்கு காரணம் சமீபத்தில் பிரபல டிக் டாக் பயனரான அமீர் சித்திக் வெளியிட்ட வீடியோ தான். அதில் பெண்கள் மீது ஆசிட் வீசுவதை ஊக்குவிக்கும் விதமாக இருந்ததாகவும் இதனால் அந்த வீடியோவிற்கு கடும் எதிர்ப்பும் கிளம்பியதாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் யூடியூபர்களையெல்லாம் குற்றம் சாட்டப்பட்ட வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனால் இது பெரிய பிரச்சனையாக மாறியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார் யூடியூபில் பிரபலமானவரான அஜய் நாகர். இந்த வீடியோ பல மில்லியன் கணக்கான மக்களால் பார்க்கப்பட்டது. பின் இந்த வீடியோ நீக்கப்பட்டது. வீடியோ நீக்கப்பட்டாலும் சித்தீக் மீது குற்றம் சாட்டப்பட்டது. ட்விட்டரில் சித்திக் எதிராக மீம்ஸ், கிண்டல், கேலிகள் எல்லாம் வெடிக்க தொடங்கின.

இந்நிலையில் டிக் டாக் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர். 2012ம் ஆண்டு சீனாவினால் உருவாக்கப்பட்டது தான் டிக் டாக் செயலி. இந்தச் சீன செயலி உலகம் முழுவதும் 2 பில்லியன் மக்களுக்கு மேல் பதிவிறக்கம் செய்யப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் மட்டும் 200 மில்லியன் மக்கள் இந்த செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது இந்த செயலியை தடை செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

-விளம்பரம்-
Advertisement