தமிழ் சினிமாவில் பல காமெடி நடிகர்கள் வந்தாலும் சிலர் மட்டுமே இன்றும் ரசிகர்கள் மனதிலும் அவர்கள் செய்த காமெடி மீம்ஸ் ரூபத்திலும் சோசியல் மீடியாவில் வளம் வருகின்றன. அப்படி “அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்” என்ற வசனத்தின் மூலம் பிரபலமானவர் தான் “டெலிபோன் ராஜ்” இவர் கிட்டதட்ட 2000திற்க்கும் மேற்பட்ட நாடகங்கள், 50க்கும் மேற்பட்ட சிரியல்கள், 200க்கும் மேற்பட்ட படங்கள் என திரையுலகத்தில் பயணித்து கொண்டிருக்கும் டெலிபோன் ராஜ் சமீபாத்தில் ஒரு பேட்டியில் பேசியிருந்தார்.
டெலிபோன் ராஜ் பேட்டி :
அந்த பேட்டியில் அவர் தான் வைகை புயல் வடிவேலுவுடன் முதன் முறையாக நடித்த அனுபவத்தை பற்றி பேசியிருந்தார். அப்படி அவர் கூறுகையில் ” இயக்குனர் வெங்கடேஷ் இயக்கத்தில் விஜய் நடித்த “பகவதி” படத்தில் நான் வடிவேல் சாருடன் நடிக்க வசனம் முதற்கொண்டு உடை அனைத்திலும் தயாராக வைத்திருந்தேன் இயக்குனரும் அதனை சரிபார்த்து விட்டார். சரி என்று நடிக்க சென்றேன். ஆனால் வடிவேல் சார் என்னை பார்த்தவுடன் என்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.
நடிக்க கூடாது என சொல்லிவிட்டார் :
நான் சென்று அன்னே என்னனா நான் வேண்டாமா என்று கேட்டேன், அதற்கு வடிவேலு அவர்கள் நீ யாருனே தெரியாது, காமெடிங்கிறது சும்மா கிடையாது போ போ என்று சொல்லிவிட்டார். பின்னர் மற்றவர்களிடம் கேட்டுக்கொண்டிருந்தார் பின்னர் நான் அவரிடம் நான் மவுலியின் 2000 மேடை நாடகங்கள் நடித்த அனுபவம் இருக்கிறது, பல பேரிடம் நான் வடிவேலுவுடன் நடிக்க போகிறேன் என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன் என கூற அவரும் ஒரு வசனத்தை பேச சொல்லி சரி என்று ஒப்புக்கொண்டு நடிக்க சொன்னார் .
காமெடியை நீக்கி விட்டனர் :
அப்படி உருவானது தான் “பகவதி” படத்தில் உள்ள காமெடி. என்ன காரணமோ தெரியாவில்லை படம் வெளியாகும் போது நான் நடித்த அந்த காட்சியை படத்தில் இருந்து நீக்கி விட்டனர் என்று இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் என்னிடம் கூறினார்கள். நான் என்னடா முதன் முறையாக வடிவேலுடவுடன் நடித்த காமெடியை தூக்கிவிட்டார்கள் என்று நினைத்த நேரத்தில் தான் ‘அன்பு’ என்ற படத்தில் வாய்ப்பு கிடைத்து. வடிவேலுவிடம் கேட்டு அவர் பரிந்துரைத்த பின்னர் தான் அந்த “முருகேசனை கூப்பிடுங்க” காமெடி உருவானது.
3000 ருபாய் தான் சம்பளமாக கொடுத்தார்கள் :
பின்னர் குருசேத்திரம் என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனக்கு 3000ருபாய் சம்பளம் என்று சொல்லிக்கொண்டிருந்தார் அந்த மேனேஜர், நானும் அவரிடம் என்னனே எவ்வளோ படத்தில் நடித்திருக்கிறோம் வெறும் 3000ருபாய் தான் கொடுக்குறீங்க என கேட்க அவர் உடனே படக்குழு கூப்பிடுகிறார்கள் என்று கூறி அனுப்பி வைத்து விட்டார். பொதுவாக ஒரு காட்சி எடுக்க வேண்டும் என்றால் 2 முதல் 3 மணிநேரம் வரை ஆகும். ஆனால் அந்த காட்சி வெறும் அரை மணிநேரத்தில் எடுக்கப்பட்ட காட்சி.
ஊத்தாப்பம் காமெடி :
அந்த காமெடியில் ஒரு ராகம் போட சொன்னார்கள் நாளும் யோசித்து “அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்” என்று கூறியதும் அங்கிருந்த பலரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். இதனை பார்த்த எனக்கு மிகவும் மகிச்சியாகி கொஞ்சம் இந்த ராகத்தையே மெருகேற்றி உருவானதுதான் அந்த ஊதாம்பம் காமெடி. இதனை நான் பலர் டிக் டாக் செய்து பார்த்திருக்கிறேன் அப்படி அதனை பார்க்கும் போதெல்லாம் நம்மை பார்த்து இவர்கள் டிக் டாக் செய்கின்றனர் என்று பெருமையாக இருக்கும் என்று கூறினார்.