சத்யராஜ் பட வில்லன் நடிகர் திடீர் மரணம்..!

0
680
Sathyaraj
- Advertisement -

தமிழ் மற்றும் மலையாளத்தில் திரையுலகில் ஏராளாமான படங்களில் நடித்து கேப்டன் ராஜ் உடல் நல குறைவால் இன்று (செப்டம்பர் 17) காலமானார். இவரது மறைவிற்கு பல்வேறு திரைத்துறை நடிகர் , நடிகைகளும் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

captain-raj

- Advertisement -

மலையாள நடிகரான கேப்டன் ராஜ் மலையாளத்தில் மம்முட்டி நடித்த “வடக்கன் வீரகதா ” என்ற படத்தில் வில்லன் நடிகராக நடித்ததன் மூலம் மலையாள திரைஉலகில் மிகப்பெரிய பிரபலமடைந்தார். அதன் பின்னர் பல படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.

இவர் தமிழில் ரஜினிகாந்த், மம்முட்டி, சத்யராஜ் மற்றும் பல்வேறு நடிகா்களுடன் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என்று பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த கேப்டன் ராஜ் இதுவரை 500 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

தமிழில் ரஜினிகாந்துடன் தா்மத்தின் தலைவன், சிவாஜி மற்றும் சத்யராஜீடன் ஜல்லிகட்டு, ஜீவா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளாா். நீண்ட காலமாக வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட இவர் சமீப காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று உடல் நலம் குன்றி தனது 68 வது வயதில் காலமானார்.

Advertisement