வடசென்னை இரண்டாம் பாகத்தை எடுக்காதீங்க..!வெற்றிமாறனுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட ரசிகர்..!வீடியோ இதோ…!

0
237
Vadachennai

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘வட சென்னை ‘ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. வட சென்னையில் வசிக்கும் ஒரு பன்முக கேரம் போர்டு கலைஞரின் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகள், காதல், ஆக்ஷன் போன்றவைகள் தான் படத்தின் கதையாக இருந்தது.

முழுக்க முழுக்க வடசென்னை பகுதியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் வட சென்னை பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்க்கையை தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளன என்று வட வட சென்னை பகுதி மக்கள் குற்றம் சாட்டி இருந்தனர்.

இதையடுத்து இந்த படத்தில் இடம்பெற்ற சில காட்சிகள் நிக்க பட்டது. அதே போல இந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் விரைவில் வெளியிட போவதாக இயக்குனர் வெற்றி மாறன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் இயக்குனர் ரஞ்சித்தின் கூகை நூலகத்தில் வடசென்னை படத்தை பற்றிய கலந்துரையாடல் நடந்தது.

இதில் ரசிகர் ஒருவர் இயக்குனர் வெற்றிமாறனிடம் ,வடசென்னை படத்தை மிகவும் மோசமாக எடுத்துள்ளனர். இதனால் இதன் இரண்டாம் பாகத்தை நீங்கள் எடுக்க கூடாது என்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு சிறிது நேரம் பதட்டமான நிலை ஏற்பட்டது