தென்னிந்திய சினிமா உலகில் ரசிகர்களுக்கு பரீட்சயமான நடிகைகளில் மாளவிகா மோகனனும் ஒருவர். இவர் தமிழ் மொழி மட்டும் இன்றி இந்தி, மலையாளம், கன்னட ஆகிய பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார். சினிமா உலகில் பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு. மோகனின் மகள் தான் நடிகை மாளவிகா மோகன். இவர் இளம் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தமிழில் அறிமுகமாகும் இவர் முதல் படத்திலேயே ரஜினியுடன் களம் இறங்கினர். இந்த படத்தில் சசி குமாரின் மனைவியாக குடும்ப குத்துவிளக்காக நடித்திருந்தார்.
தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து உள்ளார். மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் கல்லூரி மாணவியாக நடித்து உள்ளார். இந்த படத்தில் விஜய் அவர்கள் பேராசிரியாக நடித்து உள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து உள்ளார்.
இவர்களுடன் இந்த படத்தில் மாளவிகா மோகன், சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர்.இந்த படம் ஏப்ரல் 8 ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. ஆனால், கொரோனா லாக் டவுன் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய்யுள்ளது.
இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் டிக் டாக்கில் இதுவரை 1500 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இந்த சாதனையை படக்குழுவினர் மற்றும் நடிகர்கள்,விஜய் ரசிகர்கள் எல்லாம் இணையத்தில் பயங்கரமாகக் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் விஜய் ரசிகர் ஒருவர் சோசியல் மீடியாவில் தற்போது கொரோனா லாக்டவுனில் மாஸ்டர் படக்குழு வீட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறது என கார்ட்டூன் புகைப்படத்தை ஷேர் செய்து வெளியிட்டிருந்தார்.
அந்த புகைப்படத்தில் மாஸ்டர் படக்குழு எல்லோரும் ஜாலியாக இருக்க மாளவிகாமட்டும் சமைப்பது போல் கார்டூன் பதிவிட்டு உள்ளார். அது மாளவிகாவுக்கு கோபத்தை ஏற்படுத்த மூவி வீட்டில் கூட பெண்கள் சமைக்கும் வேலை தான் செய்ய வேண்டுமா? இப்படி பெண்கள் தான் இந்த வேலையை செய்ய வேண்டும் என சொல்லும் முறை எப்போது சாகும்? ச்சை என மாளவிகா ட்விட் செய்தார்.ஆனால், அந்த பதிவை பின்னர் நீக்கி விட்டார் மாளவிகா.
இந்த நிலையில் ட்விட்டர்வாசி ஒருவர் மாளவிகா மோகனன் சமைப்பது போல் இருந்த புகைப்படத்திற்கு பதிலாக அவர் புத்தகம் படிப்பது போல எடிட் செய்து கொடுத்துள்ளார். இதை கண்ட மாளவிகா மோகனன் இது மிகவும் பிடித்திருக்கிறது என்று கமென்ட் செய்துள்ளார். மேலும், மற்றும் ஒரு புகைப்படத்தில் மாளவிகா மோகனன் சமீபத்தில் புடவையில் போஸ் கொடுத்த போட்டோவை அந்த கார்ட்டூன் புகைப்படத்தில் எடிட் செய்திருக்கிறார் அந்த ரசிகர்.