சினிமா உலகில் முடிசூடா மன்னனாக தூள் கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இறுதியாக இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் வேற லெவல் வெற்றியை கடந்து. கொரோனா பிரச்சனை காரணமாக திரையரங்குகளில் 50% இருக்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்து நிலையில் கூட மாஸ்டர் திரைப்படம் பல கோடி வசூலை குவித்தது. இந்நிலையில் ஆனால், தற்போது ‘தளபதி 65’ படத்தை இயக்கும் வாய்ப்பை தட்டி பறித்துள்ளார் இயக்குனர் நெல்சன். தளபதி 65 படத்தின் தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் என்பது முதலிலேயே உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார்.
சமீபத்தில் தான் இந்த படத்தின் நாயகி பற்றிய அப்டேட் வெளியானது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக முகமூடி பட நடிகை பூஜா ஹேக்டே கமிட் ஆகி இருக்கிறார். இதை தவிர இந்த படத்தில் பணிபுரியம் மற்ற கலைஞர்கள் பற்றிய தகவல் வெளியாகவில்லை.இந்த நிலையில் தளபதி 65 படத்தில் ஜானி மாஸ்டர் நடனப்பயிற்சிக்காக இணைந்திருக்கிறார். இதுபற்றி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்ட அவர் , “என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. இந்த வாய்ப்பை மதிப்பு நிறைந்த ஒன்றாக மாற்றுவேன்.” என்ற பதிவுடன், இந்த பாடலுக்கான ரிகர்சல் ஏப்ரல் 24ம் தேதி என்றும், மே 3 முதல் 9 வரை பாடலின் படப்பிடிப்பு நடக்க இருப்பதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால், அந்த பதிவை உடனடியாக நீக்கிவிட்டார்.
இருப்பினும் அந்த பதிவின் ஸ்க்ரீன் ஷாட் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் என்றதும் தமிழில் இருக்கும் ஜானி மாஸ்டர் என்று நினைக்க வேண்டாம். இவர் தெலுங்கு ஜானி மாஸ்டர். தெலுங்கில் பல படங்களில் பணியாற்றிய இவர், தமிழில் குலேபகாவாலி, மாரி 2, பட்டாஸ், நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்களில் பணியாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி ஒரு நிலையில் ட்விட்டரில் ஒருவர், சூப்பர், ஷோபி தினேஷ் ஸ்ரீதர் ஷெரிப் ராஜு சுந்தரம்னு எல்லாரும் போர் அடிச்சிடாங்க என்று பதிவிட்டு இருந்தார். இந்த ட்வீட்டை பார்த்து கடுப்பான ஷாந்தனு, இத்தனை வருசமா இவங்க டான்ச தான் பல வருசமா நாங்க ரசிச்சோம். ஜானி மாஸ்டரும் டலேண்ட் தான் . ஆனால், அவரை உற்சாகப்படுத்தலாம் அதுக்கு பதில் மத்தவங்கள மட்டம் தட்டாதீங்க என்று கூறியுள்ளார்