என்ன அநியாயம், தண்ணி வேணுனா கூட இவ்ளோ காஸ் கொடுத்து வாங்கணுமா – விமர்சனத்திற்கு உள்ளான பிகில் தயாரிப்பாளரின் Ags தியேட்டர்.

0
4251
ags
- Advertisement -

பிகில் படத்தின் தயாரிப்பாளருக்கு சொந்தமான திரையரங்கில் தண்ணீர் பாட்டில் அதிக விலைக்கு விற்கப்படுவது பற்றி ட்விட்டரில் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவில் கடந்த ஓராண்டிற்கு மேலாக கொரோனாவின் தாக்கம் தலைவிரித்து ஆடியது. கொரோனா பிரச்சனை காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டு இருந்தது. மற்ற தொழில்களை போலவே சினிமா தொழிலும் முடங்கி போய் இருந்தது.

-விளம்பரம்-

அதே போல படப்பிடிப்புகள் கூட பல மாதங்களாக முடங்கி இருந்தது. பின்னர் படப்பிடிப்புகள் துவங்கப்பட்டாலும் திரையரங்குகள் பல மாதங்களாக திறக்கப்படாமல் தான் இருந்தது. திரையரங்குகள் திறக்கப்படாததால் பல்வேரு உச்ச நட்சத்திரங்களின் படங்கள் கூட Ott தளத்தில் தான் வெளியாகி இருந்தத்த்து.

இதையும் பாருங்க : சம்மர் முடிஞ்சிடுச்சி அதான், இப்படி காய போட்டுட்டேன் – எமி ஜாக்சன் பகிர்ந்த முகம் சுழிக்கும் புகைப்படம்

- Advertisement -

தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து வருவதால் பல மாதங்கள் கழித்து திரையரங்குகள் மீண்டும் 50 சதவீத பார்வையாளகர்களுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு நிலையில் பிகில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான Agsக்கு சொந்தமான திரையரங்கில் தண்ணீர் பாட்டில் 50 ரூபாய்க்கு விற்கப்படுவதாக வாடிக்கையாளர் ஒருவர் ட்வீட் போட்டு இருந்தார்.

அதில், என்ன ஒரு அடாவடித்தனம், திரையரங்கில் குடிக்க சாதாரண தண்ணீர் கிடையாது. உங்களுக்கு வேண்டும் என்றால் காசு கொடுத்து தான் வாங்க வேண்டும் என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்த Ags நிறுவன உரிமையாளர் அர்ச்சனா, உங்கள் அனுபவத்திற்கு மன்னிக்கவும். வீட்டிலிருந்து குடிநீர் கொண்டு வர அனுமதிக்கிறோம்.

-விளம்பரம்-

பார்வையாளர்களின்பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு எங்களால் தண்ணீர் விநியோகஸ்தர்களை இந்த இடத்தில் வைக்க முடியவில்லை என்று பதிவிட்டுள்ளார். அர்ச்சனாவின் இந்த உடனடி பதிலை பலர் பாராட்டினாலும் ஒரு சிலரோ 50 ரூபாய்க்கு 4 பாராட்டோ ஒரு முட்ட கலக்கி சாப்பிடலாம் என்று கேலி செய்து வருகின்றனர்.

Advertisement