பிரபல நடிகர் சைப் அலிகானின் மகளை கை கொடுக்க சொல்லி அத்து மீறிய நபர். வைரலாகும் வீடியோ.

0
1998
sara-ali-khan

சினிமா பிரபலங்களை கோவில்களிலோ,பொது இடங்களிலோ சந்திக்கும் போது அவர்களிடம் செல்பி எடுப்பது வழக்கமான ஒன்று. அப்போது கூட்டங்கள் குவியும். இதனால் பிரபலங்கள் பல பேருக்கு பல பிரச்சனைகள் ஏற்பட்டு உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அந்த வகையில் பிரபல நடிகரான சைப் அலிகானின் மகள் நடிகை சாரா அலி கானுடன் புகைப்படம் எடுக்க முயன்ற ரசிகர் ஒருவர் அத்து மீறி நடந்து கொண்ட சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பாலிவுட் நடிகரும், தயாரிப்பாளருமான சயீப் அலிகானின் மகன். அதாவது சயீப் அலிகானின் முதல் மனைவியின் மகள் தான் சாரா அலி கான். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தனது முதல் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்னையால் பிரிந்துவிட்ட சைப் அலிகான் அதன் பின்னர் பிரபல பாலிவுட் நடிகையான கரீனா கபூரை பல வருடங்களாக காதலித்து வந்தார் . அதன் பின்னர் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். விகாரத்துக்கு பின்னரும் தனது முதல் மனைவிக்கு பிறந்த மகளான சாராவை கவனித்து கொள்கிறார் சைப் அலிகான்.

- Advertisement -

சாரா அலிகான் கடந்த ஆண்டு வெளியான ‘கேதார்நாத்’ படம் மூலம் ஹீரோயினியாக அறிமுகமானவர். அதற்கு பிறகு நடிகை சாரா அலி கான் அவர்களுக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. தற்போது அவர் படங்களில் நடித்துக் கொண்டு பிஸியாக வருகிறார். நடிகை சாரா அலி கான் அவர்கள் அண்மையில் தான் விடுமுறைக்காக அமெரிக்கா சென்று இருந்தார். பின் நடிகை சாரா அவர்கள் விடுமுறையை சந்தோஷமாக கொண்டாடி கழித்து விட்டு கடந்த சில தினங்களுக்கு முன்னர் தான் மும்பை திரும்பினார்.

சமீபத்தில் நடிகை சாரா அலி கானை பொது இடத்தில் சந்தித்த ரசிகர்கள் சிலர் அவருடன் புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்கள். மேலும், ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க அவரும் முகம் சுளிக்காமல் புகைப்படங்களை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது ரசிகர் ஒருவர் சாரா அலி கானுக்கு கைகொடுத்தார். இதனால் அவரும் பதிலுக்கு கைகொடுக்க திடீரென்று அந்த ரசிகர் சாரா அலி கான் கையில் முத்தம் கொடுத்துவிட்டார். இதனால் சாரா அலி கான் கொஞ்சம் பதட்டம் அடைந்தார். மேலும், அவர் அருகில் இருந்த ஒருவர் அந்த நபரை அடிக்கவும் முற்பட்டார் தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

Advertisement