என்னடா, நீயே கூறு பத்து ருவானு விக்க ஆரம்பிச்சிட்ட – மாஸ்டர் 50rs டிக்கெட்டை கேலி செய்த அஜித் ரசிகர் – வலிமை படத்தை குறிப்பிட்டு திரையரங்கம் பதிலடி.

0
20527
- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஜனவரி 14 வெளியாகி இருந்தது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் எப்போதோ வெளியாக இருந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போயிக்கொண்டு இருந்த நிலையில் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

தமிழகம் மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்கள் மற்றும் இந்திய அளவில் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மாஸ்டர் வசூலிலும் சாதனை படைத்தது. 10 நாட்களில் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூல் செய்து இருந்த விஜய்யின் ‘மாஸ்டர்’. இதனை #MasterEnters200CrClub என்ற ஹேஷ்டேக் மூலம் ட்விட்டரில் கொண்டாடி இருந்தனர் விஜய் ரசிகர்கள். இதற்கு முன்பு விஜய் நடித்த, மெர்சல், சர்கார், பிகில் ஆகிய படங்களும் பாக்ஸ் ஆஃபிஸில் 200 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் பாருங்க : அட, பாகுபலி படத்தில் வந்தது பெண் குழந்தையா. இப்போ எப்படி இருக்கார் பாருங்க. புகைப்படம் இதோ.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் மாஸ்டர் திரைப்படத்தை OTT வெளியிட்டுள்ள முடிவு திரையரங்க உரிமையாளர்களை கொஞ்சம் அதிருப்த்தியில் ஆழ்த்தியுள்ளது.ஒரு பெரிய நட்சத்திரத்தின் படம் திரையரங்குகளில் வெளியான வெறும் 16 நாட்களில் வெளியாவது இதுவே முதல்முறை. இருப்பினும் மாஸ்டர் திரைப்படம் இன்னமும் பல திரையரங்களில் ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி 25 நாட்களை எட்டியுள்ளது.

இதையடுத்து திருநெல்வேலியில் பிரபல திரையரங்கான ராம் முத்துராம் திரையரங்கம் மாஸ்டர் திரைப்படத்தின் டிக்கெட்டை வெறும் 50 ரூபாய்க்கு விற்கப்போவதாக அறிவித்து ட்வீட் ஒன்றை செய்து இருந்தது. இதனை கேலி செய்த அஜித் ரசிகர் ஒருவர் (அவரின் ட்விட்டர் profileலில் இருபத்து அஜித்தின் cover போட்டோ ) ஏன்டா ராம் சினிமாஸு, நான் என்னவோ உன்ன பெரிய ரவுடின்லடா நெனச்சேன். நீயே கூறு பத்து ருவானு விக்க ஆரம்பிச்சிட்ட என்று கேலியாக பதிவிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

இதற்கு பதில் அளித்த ராம் சினிமாஸ் , வலிமை படமும் பாக்ஸ் ஆபீஸை நெருங்கும், தல ரசிகர்கள் படத்தை பிளாக் பாஸ்டராக ஆக்கும் போது அதற்கு கைமாறாக 50 ரூபாய்க்கு வலிமை வெற்றி காட்சியை ஏன் கொடுக்க கூடாது என்று பதிலடி கொடுத்துள்ளது.

Advertisement