நயன்தாராவை கிஸ் அடிக்கும் போட்டோவை கேட்ட ரசிகர் – விக்னேஷ் சிவனின் செம பதில்.

0
1605
Vignesh-Shivan
- Advertisement -
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஹாட் காதல் ஜோடிகளாக திரையுலகில் வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். விக்னேஷ் சிவனுக்கு முன்பாக நயன்தாரா சிம்பு மற்றும் பிரபுதேவாவை காதலித்து நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் ஆனால் இந்த இரண்டு காதலை விட நயன்தாரா விக்னேஷ் சிவன் உடனான காதலில் தான் மிகவும் உறுதியாக இருந்து வருகிறார். இவர்களின் இருவர் திருமணம் எப்போது என்பது தான் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வரும் ஒரு விஷயம். சமீபத்தில் கூட இவர்கள் இருவருக்கும் ரகசிய திருமணம் நடைபெற்றுவிட்டது என்று செய்திகள் பரவியது.

இதுகுறித்து விளக்கமளித்த விக்னேஷ் ஷுவான் இதுவரை சமூக வலைத்தளத்தில் எங்களுக்கு ஒரு இருபத்தி இரண்டு முறைக்கு மேல் திருமணம் செய்து வைத்து விட்டார்கள். நாங்கள் இருவரும் அவரவர் வேலையை செய்து வருகிறோம். அதேபோல எங்கள் இருவருக்குமே குறிக்கோள் மற்றும் லட்சியங்கள் இருக்கிறது அதனை அடைந்து முடித்த பின்னர் தான் திருமணம். அதேபோல இப்போது எங்கள் இருவருக்கும் காதல் நன்றாக சென்று கொண்டிருக்கிறது. அந்த லவ் நல்லா இருக்கிறது.

இதையும் பாருங்க : சுறா படத்தைக் கிண்டல் செய்த மாநகரம் பட நடிகர் சந்தீப் கிஷன் – திட்டி தீர்த்த விஜய் ரசிகர்களுக்கு மீண்டும் பதிலடி. (சரியா தான் சொல்லி இருக்காரு)

-விளம்பரம்-

அந்த காதல் போர் அடித்து விட்டால் திருமணம் செய்துகொண்டுகொள்வோம் என்று கூறி இருந்தார். எந்த பண்டிகை வந்தாலும் நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் புகைப்படத்தை எடுத்து அதனை தனது சமுக வலைதளத்தில் பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவர் நயன்தாராவுடன் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதே போல இன்ஸ்டாவில் ரசிகர்களின் சில கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

- Advertisement -

அப்போது ரசிகர் ஒருவர், நீங்களும் நயன்தாராவும் கிஸ் அடித்த புகைப்படம் வேண்டும் என்று கேட்டு இருந்தார். அதற்கு பதில் அளித்த விக்னேஷ் சிவன், நான் அப்போது பிஸியாக இருப்பேன். வேறு யாரவது தான் போட்டோ எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தற்போது நயன்தாரா, நெற்றிக்கண், காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement