""
-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

நீயெல்லாம் மனுஷனா, இந்த நிலைமை எந்த தந்தைக்கும் வரக்கூடாது – விஜய்யை திட்டி தீர்க்கும் ரசிகர்கள். இது தான் காரணம்.

0
504
vijay
-விளம்பரம்-

மகன் இல்லாமல் எஸ் ஏ சந்திரசேகர் தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி இருக்கும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனராக கொடிகட்டி பறந்தவர் எஸ் ஏ சந்திரசேகர். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமல்லாமல், நடிகர், தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன் முகங்களை கொண்டவர். 1981 ஆம் ஆண்டு வெளிவந்த ‘சட்டம் ஒரு இருட்டறை’ என்ற படத்தில் தான் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் இயக்குனராக அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களை இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் 70க்கும் மேற்பட்ட திரைப் படங்களை இயக்கி இருக்கிறார். இவர் இயக்கிய படங்கள் எல்லாமே மக்களிடையே நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்து இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் இவர் 40 வருடங்களுக்கு மேலாக சினிமா திரை உலகில் பணியாற்றி வருகிறார். கடைசியாக இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் இயக்கிய 70 வது திரைப்படம் “கேப்மாரி”. இந்த படத்தில் ஜெய், அதுல்யா ரவி, வைபவி சாண்டில்யா, விபின் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

இதையும் பாருங்க : பல வருடங்கள் கழித்து சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுக்கும் திருமதி செல்வம் அபிதா. இதோ ப்ரோமோ.

எஸ் ஏ சந்திரசேகர் குறித்த தகவல்:

-விளம்பரம்-

இந்த படம் இன்றைய இளைஞர்கள் செய்யும் அட்டூழியங்களையும், போடும் ஆட்டங்களையும் வெட்ட வெளிச்சமாக சுட்டிக்காட்டி, அதனால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை மையமாக வைத்து உருவான கதை. ஆனால், படம் எதிர்பார்த்த வெற்றியை கிடைக்கவில்லை. அதற்கு பிறகு இவர் எந்த படத்தையும் இயக்க வில்லை. பின் எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் ‘யார் இந்த எஸ்.ஏ.சி’ என்ற யூடியூப் சேனலை தொடங்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

எஸ் ஏ சந்திரசேகர் மகன்:

அதில் அவர் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றையும், சினிமா பயணத்தையும் பற்றி பதிவு செய்து வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அதோடு தற்போது சினிமா உலகில் முடிசூடா மன்னனாக கலக்கிக் கொண்டிருக்கும் தளபதி விஜய்யை உருவாக்கியதும் எஸ் ஏ சந்திரசேகர் தான். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. சமீபத்தில் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படம் வெளியாகி இருந்தது.

விஜய் நடிக்கும் படம்:

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் விஜய் அவர்கள் தளபதி 66 என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படி எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் விஜய் மட்டுமில்லாமல் பல கலைஞர்களையும் உருவாக்கி இருக்கிறார். இந்நிலையில் எஸ் ஏ சந்திரசேகர் அவர்களின் பிறந்தநாள் புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

விஜய்யை திட்டும் நெட்டிசன்கள்:

அதாவது, எஸ்.ஏ சந்திரசேகர் அவர்கள் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து தன்னுடைய பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடுகிறார். ஆனால், அவருடைய மகன், மருமகள், பேரப்பிள்ளைகள் யாருமே இல்லை. தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியானதைத் தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் பையன் என்று ஒருத்தனை தண்டத்துக்கு பெற்று வைத்திருக்கிறார். தனியா பர்த்டே கொண்டிருக்கிறார் பாவம் என்றெல்லாம் விஜய்யை திட்டி நெட்டிசன்கள் கமெண்டுகளை போட்டு வருகிறார்கள்.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news