பல வருடங்கள் கழித்து சின்னத்திரையில் ரீ-என்ட்ரி கொடுக்கும் திருமதி செல்வம் அபிதா. இதோ ப்ரோமோ.

0
400
abitha
- Advertisement -

மீண்டும் சின்னத்திரையில் நடிகை அபிதா ரீ- என்ட்ரி கொடுத்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருந்தவர் அபிதா. இவர் சன் டிவியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் என்ற தொடரின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாகி இருந்தார். இந்த தொடர் 2007 ஆம் ஆண்டிலிருந்து 2013ம் ஆண்டு வரை ஒளிபரப்பப்பட்டது.

-விளம்பரம்-

எளிமையான கதை களத்துடன் நடுத்தர மக்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் தொடராக இந்த தொடர் இருந்தது. இதனால் இந்த தொடர் தமிழக மக்கள் மத்தியில் இடம்பிடித்து விட்டது. இந்த தொடரில் சஞ்சீவ் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த தொடரின் மூலம் சஞ்சீவ் மற்றும் அபிதா இருவருக்கும் பெரிய பெயர் கிடைத்தது. அது மட்டுமில்லாமல் இவர்களுக்கு என்று ரசிகர்கள் கூட்டம் ஏற்பட்டது. மேலும், இந்த சீரியலை கலைஞர் தொலைக்காட்சியில் மறு ஒளிபரப்பு செய்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

- Advertisement -

அபிதா திரைப்பயணம்:

ஆனால், அபிதா சின்னத்திரைக்கு முன்பே வெள்ளித்திரையில் பல படங்களில் நடித்திருக்கிறார். இயக்குனர் பாலா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ‘சேது’ திரைப்படம் விக்ரம் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது. விக்ரமிற்கு சீயான் என்ற பட்டப்பெயரை கொடுத்ததும் இந்த படம் தான். இந்த படத்தில் அபிதா குஜலாம்பாள் என்ற கதாபத்திரத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார்.

அபிதா நடித்த சீரியல்கள்:

அதன் பின்னர் இவர் தமிழ் சினிமாவில் ஒரு ரௌண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இவருக்கு பெரிய ஹிட் படங்கள் அமையவில்லை. மேலும், சேது படத்திற்கு பின்னர் இவர் தமிழில் சீறி வரும் காலை, பூவே பெண் பூவே போன்ற பல படங்களில் நடித்து இருந்தார். அதன் பின்னர் சினிமாவில் வாய்ப்பு குறையவே சீரியல் பக்கம் திரும்பினார். சன் தொலைக்காட்சியில் இவர் நடித்த ‘திருமதி செல்வம்’ தொடர் மெகா ஹிட் அடைந்தது. அதன் பின்னர் இவர் ஒரு சில சீரியலில் மட்டும் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

அபிதா குடும்பம்:

பின் அபிதா அவர்கள் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பின்னர் இவருக்கு இரண்டு அழகான பெண் குழந்தையும் பிறந்தது. இறுதியாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முத்தாரம் என்கிற தொடரில் நடித்து இருந்தார். அதற்கு பின் இவர் பிரேக் எடுத்து கொண்டார். இந்த நிலையில் நடிகை அபிதா மீண்டும் சின்னத்திரைக்கு ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ரீ-என்ட்ரி கொடுக்கும் அபிதா:

அதாவது, பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள தொடர் மாரி. இந்த மாரி என்ற தொடரில் அபிதா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதுகுறித்த புரோமோ தான் தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது தொடர்ந்து சீரியல் ரசிகர்கள் பலருக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement