ஜகமே தந்திரம் படத்தை ஜிகிர்தண்டா படத்துடன் ஒப்பிட்டு வச்சி செய்யும் நெட்டிசன்கள். அட, சரியா தான் இருக்கு

0
1163
jagam
- Advertisement -

சமீபத்தில் வெளியான ஜகமே தந்திரம் படத்தையும் ஜிகிர்தண்டா படத்தையும் ஒப்பிட்டு பல மீம்கள் வைரலாகி வருகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜு, கலையரசன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’ நேற்று (ஜூன் 18) Netflix Ott தளத்தில் வெளியாகி இருந்தது.லண்டனில் புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அகதிகளை அந்த நாட்டில் இருந்து விரட்ட கேங்ஸ்டர் கும்பல் ஒன்று செயல்பட்டு வருகிறது.

-விளம்பரம்-

அவர்களுக்கு எதிராகவும் ஈழத்தமிழகர்கள் மற்றும் புலம்பெயர் மக்களுக்கு ஆதரவாக ஒரு தமிழர் போராடுகிறார். அவரை எதிர்த்து அதே நாட்டை சேர்ந்த ஒரு கேங்ஸ்டர் கும்பல் இருந்து வருகிறது. மேலும், அந்த தமிழ் டானை கொள்ள திட்டமிடும் லண்டன் கேங்ஸ்டர் கும்பல் அவரை மதுரை தமிழரான தனுஷை லண்டன் அழைத்து வந்த அந்த தமிழ் டானை கொள்கின்றனர். பின்னர் தனுஷ், அந்த தமிழ் போராளியின் வரலாற்றை தெரிந்து கொண்டு லண்டன் தாதாவை எதிர்த்து போராடுகிறார்.

- Advertisement -

தொடர்ந்து கேங்ஸ்டர் கதைகளை எடுத்து வந்த கார்த்திக் சுப்புராஜ், இந்தமுறை இனவெறி அரசியலையும் புலம்பெயர்ந்து செல்பவர்களின் பிரச்சனையையும் சேர்த்து இந்த படத்தில் காண்பித்து உள்ளார் கார்த்திக் சுப்புராஜ். இந்த படம் சுமாரான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில் இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகிர்தண்டா படத்துடன் ஒப்பிட்டு வருகின்றனர்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா போன்றவர்கள் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ஜிகிர்தண்டா திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. மதுரையில் ஒரு மாஸ் தாதாவாக இருக்கும் நபரை படம் எடுக்கிறேன் என்று சொல்லி அவரை நம்ப வைத்து பின்னர் அவரை ஒரு காமெடியனாக காண்பித்து இருப்பார் ஹீரோ.

-விளம்பரம்-

தற்போது இதே கதையை தான் ஜகமே தந்திரம் என்று கார்த்திக் சுப்புராஜ் எடுத்துள்ளார் என்று கேலி செய்து வருகின்றனர். ஒரு பெரிய கேங்ஸ்டர், அவரை வேவு பாக்க வரும் ஹீரோ, ஹீரோக்கு உதவ ஒரு நண்பன் , கேங்ஸ்டர் கூட்டத்தில் ஒரு உலறு வாய் , அவன் கூட பழகி அந்த கேங்ஸ்டர் பத்திய எல்லா விவரத்தையும் ஹீரோ கருக்குறார்.

ஒரு கட்டத்துல கேங்ஸ்டர் கிட்ட ஹீரோ மாட்டிக்கொள்ளும் போது கேங்ஸ்டர் ஒரு டீல் போடுகிறார் அதற்கு ஹீரோவும் ஒப்புக்கொள்கிறார், இறுதியில் கேங்ஸ்டருக்கு ஹீரோ துரோகம் பண்ணி விடுகிறார். இது தான் இந்த இரண்டு படங்களுக்கும் இருக்கும் ஒற்றுமை, புதிய பாட்டிலில் பழைய சரக்கை ஊற்றி கொடுத்துவிட்டார் கார்த்திக் சுப்புராஜ் என்று நெட்டிசன்கள் மீம்களை பகிர்ந்து வருகின்றனர்.

Advertisement