தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கர்ணன்’ படத்தை நடிகர் லிவிங்ஸ்டன்னுடன் ஒப்பிட்டு வருகின்றனர் நெட்டிசன்கள். பரியேறும் பெருமாள்’ படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் தேசிய விருது பெற்ற நாயகன் தனுஷ் நடிப்பில் உருவான ‘கர்ணன்’ திரைப்படம் நேற்று (ஏப்ரல் 9) வெளியாகியது. ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா, கௌரி கிஷன், நட்டி என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வேற லெவல் ஹிட் அடித்தது.
1995ல் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொடியங்குளம் கிராமத்தின் மீது காவல்துறை கொடுமையான தாக்குதல் ஒன்றை நடத்தியது. அதில் பலர் கொல்லப்பட்டனர். பல கிராமங்கள் சூறையாடப்பட்டன. தாக்குதலில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர்.இந்தப் பின்னணியை மையமாக வைத்து உருவாகி இருந்தது ‘கர்ணன்’ இந்த படத்திலும் வழக்கம் போல தனுஷ் தனது நடிப்பில் மிரட்டி இருந்தார்.
இதையும் பாருங்க : கில்லி படத்திற்கு முன்பே சன் டிவியின் பிரபல சீரியலில் நடித்துள்ள விமல் – இதோ வீடியோ.
இப்படி ஒரு நிலையில் கர்ணன் படத்தை லிவிங்ஸ்டன் நடித்த ‘என் புருஷன் குழந்தை மாதிரி’ படத்தின் காட்சியோடு ஒப்பிட்டு வருகின்றனர். லிவிங்ஸ்டன் மற்றும் தேவயானி நடிப்பில் வெளியான இந்த படத்தின் ஒரு காட்சியில் பஸ் ஸ்டாப் பலகை ஒன்று இடம்பெற்று உள்ளது. அதில் ‘மாங்குடி பஸ் நிறுத்தம் – பஸ் நிறுத்தாவிட்டால் நிறுத்தப்படும்’ என்று எழுதப்பட்டுள்ளது
தற்போது இதை ஒப்பிட்டு தான் நெட்டிசன்கள் பலரும் Low Budget கர்ணன் என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு முக்கிய காரணமே ‘கர்ணன்’ படத்தில் வரும் கிராமத்தில் பஸ் நிறுத்தம் இல்லை என்பதால் தான் ஊர் மக்கள் போராடுவார்கள். பின்னர் ஒரு கட்டத்தில் பஸ்ஸை உடைத்து பின்னர் அதன் மூலம் பிரச்சனை ஏற்பட்டு பல போராட்டங்களுக்கு பின் தங்கள் ஊருக்கு பஸ் நிறுத்தத்தை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.