நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து காஞ்சமனை 4னு எடுங்க – சுந்தர் சி, லாரன்சை வச்சு செய்யும் நெட்டிசன்கள்

0
2259
sundar
- Advertisement -

சமீப காலமாகவே தமிழ் சினிமா உலகில் பத்தில் 8 படம் பேய் படமாக தான் வருகிறது. ஏதாவது ஒரு கான்செப்ட் போட்டு சவுண்ட் எபக்ட் போட்டு பேய் படம் என்று எடுத்து வருகிறார்கள். அந்த அளவுக்கு தமிழ் சினிமா உலகில் போய் படங்களின் நிலைமை மாறி உள்ளது. பொதுவாகவே போய் படம் என்றால் மக்கள் மத்தியில் அதிகம் வரவேற்கப்பட்டும். இதை புரிந்து கொண்டு இன்றைய இயக்குனர்கள் எதாவது ஒன்னு எடுக்கணும் என்பதற்காக பேய் படத்தை எடுத்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

இது ஒரு பக்கம் இருக்க தமிழ் சினிமாவில் காமெடி பேய் படங்களை எடுப்பதில் கைதேர்ந்தவர்கள் ராகவா லாரன்ஸ் மற்றும் சுந்தர் சி. இவங்களோட இயக்கத்தில் வந்த பேய் படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று இருந்தது. அந்தவகையில் ராகவா லாரன்ஸ் இயக்கத்திலும் நடிப்பிலும் வெளிவந்த முனி, காஞ்சனா, காஞ்சனா-2 போன்ற படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து சுந்தர் சி இயக்கத்திலும் நடிப்பிலும் வெளிவந்த அரண்மனை, அரண்மனை 2 படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

- Advertisement -

இப்படி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று விட்டது என்ற உடனே இவர்கள் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு அதை அரைத்த மாவையே அரைப்பது போல அந்த கான்சப்ட்டை வைத்து கொண்டு 3,4,5 என்று தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்களாக படங்களை எடுத்து வருகிறார்கள். கடைசியாக நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்கள் காஞ்சனா 3 படத்தை வெளியிட்டிருந்தார். இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் பயங்கரமாக கழுவி ஊற்றியும் இருந்தார்கள்.

kanchana-aranmanai-3-memes

படம் ‘ச்சே’ என்று ரசிகர்கள் முகம் சுளிக்கும் வகையில் இருந்தது. இந்தப் படம் தான் இப்படி என்றால் சுந்தர் சி நடிப்பில் தற்போது வெளிவந்த அரண்மனை 3 படம் சொல்லவே வேண்டாம். அந்த அளவிற்கு மோசமான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பயங்கரமாக கிண்டல் கேலி செய்து கலாய்த்து வருகிறார்கள்.

-விளம்பரம்-
kanchana-aranmanai-3-memes-1

இதைப்பார்த்த நெட்டிசன்கள் தற்போது சும்மா இருப்பார்களா? வழக்கம்போல சோஷியல் மீடியாவில் தங்களுடைய வேலையை காண்பித்து விட்டார்கள். மேலும், சோசியல் மீடியாவில் சுந்தர் சி மற்றும் லாரன்ஸ் இவர்களின் மூன்றாம் பாகத்தை குறித்து பங்காக வைத்து செய்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் நீங்கள் இருவரும் சேர்ந்து (காஞ்சனா+ அரண்மனை) காஞ்சமனை என்ற பெயரில் நான்காம் பாகம் எடுக்க கூடாது என்று கிண்டலடித்து உள்ளனர். மேலும், இவர்கள் இருவரின் படங்களின் படங்களின் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு பல்வேறு விதமாக கேலி செய்து வருகின்றனர்.

Advertisement