அன்னிக்கி வெங்கடேஷ் நடிச்சப்ப ஒட்டு மொத்த கோலிவுட்டும் கேலி பண்ணீங்களே – ரஜினி,நயன் ஜோடியால் கடுப்பான ரசிகர்கள்.

0
12186
annathe
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக கலக்கிக் கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். இவருக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளார்கள். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட். அந்த வகையில் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளிவந்த தர்பார் படம் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழிகளிலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த் அவர்கள் சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

Image

மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில் அண்ணாத்த படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.

- Advertisement -

இது குறித்து சோசியல் மீடியாவில் எக்கச்சக்கமான நெகடிவ் கமெண்டுகள் வந்து கொண்டு இருக்கின்றன. அது என்னவென்றால், அண்ணாத்தா படத்தின் சார காற்றே பாடலின் நயன்தாரா– ரஜினிகாந்த் போஸ்ட் ஒன்று வெளியாகியுள்ளது. இதை பார்த்து ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருவதோடு சிலர் விமர்சித்து வருகிறார்கள்.

இந்த போஸ்டை சோசியல் மீடியாவில் போட்டு ரசிகர்கள் ரஜினிகாந்துக்கு தற்போது 70 வயது ஆகிவிட்டது இருந்தாலும் இவர் இளமையாக தோற்றம் அளிப்பது பாராட்டு கூறிய விஷயமாக இருந்தாலும் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்தது குறித்து பல்வேறு விதமாக விமர்சித்து வருகின்றனர். மேலும், இவர்கள் இருவருக்கும் இடையே பல வருடங்கள் வயது வித்தியாசம் இருக்கிறது. ரஜினிகாந்த் அவர்கள் மீனா, குஷ்பு உடன் ஜோடி சேரப்போகிறார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்தது அதிர்ச்சியை அளிப்பதாக கூறி வருகின்றனர்.

-விளம்பரம்-

சந்திரமுகி, குசேலன், சிவாஜி, தர்பார் போன்ற பல படங்களில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து உள்ளார். இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் அண்ணாத்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார். மீண்டும் மீண்டும் நயன்தாரா — ரஜினிகாந்த் ஜோடி சேருவது குறித்து சோசியல் மீடியாவில் பல்வேறு விதமான ட்வீட்டுகள் எழுந்து வருகின்றன. அதேபோல் அம்மு அபிராமி ஜோடியாக நடித்ததற்கு வெங்கடேஷ் கிண்டல் செய்திருந்தார்கள். 70 வயதான ரஜினிகாந்துக்கு 36 வயதான நயன்தாராவை ஜோடி சேர்ப்பது குறித்து தற்போது விமர்சித்து வருகின்றார்கள். அண்ணாத்த படத்தை பற்றி பேசுவதை விட நயன்தாரா– ரஜினி ஜோடி குறித்து பல்வேறு விமர்சனங்கள் சோசியல் மீடியாவில் எழுந்து வருகின்றன.

Advertisement