சமீப காலங்களில் தெலுங்கு நடிகரான விஜய் தேவர்கொண்டாவும் நடிகை ராஷ்மிகா மந்தனாவும் காதலித்து வருகின்றனர் என்று சிலர் கூறிவந்த நிலையில் சமீபத்தில் இருவரும் பதிவிட்டிருந்த நீச்சல் புகைப்படங்களை ஆதாரமாக கொண்டு இருவரும் ஒன்றாக விடுமுறைக்கு வெளியில் சென்றுள்ளனர் என்று சோசியல் மீடியாவில் தகவல் பரவிவந்தது. இந்த நிலையில் அதனை உறுதி செய்யும் வகையில் ராஷ்மிகா நடத்திய இன்ஸ்டாகிராம் நேரடி ஒளிபரப்பில் தெரிய வந்துள்ளது.
இன்கேம் இன்கேம் காவாலி’ என்ற ஒரு பாடல் மூலம் இளைஞர்களின் ஹார்ட்டு பீட்டே நம்ம ராஸ்மிகா தான் என்று சொல்லலாம். தற்போது தென்னிந்திய சினிமா உலகில் சொல்லலாம். ராஷ்மிகா மந்தனா ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்கிறார். நடிகை ராஷ்மிகா மந்தனா கடந்த 2016 ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் . அது மட்டும் இல்லாமல் முதல் படத்திலேயே தனெக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர். பின் இவர் நடிகர் விஜய் தேவர் கொண்டாவுக்கு ஜோடியாக ‘கீதா கோவிந்தம்’ என்ற படத்தின் மூலம் தெலுங்கு மொழியில் அறிமுகமானவர்.
இந்த படம் பிளாக் பஸ்டர் படமாகவும் அமைந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகை ராஷ்மிகா மறுபடியும் விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து ‘டியர் காம்ரேட்’ தேவர்கொண்டா நடித்து உள்ளார். இப்படி இவர் நடிப்பில் நடித்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதோடு நடிகை ராஷ்மிகா அவர்கள் சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திலேயே ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்தவர். தற்போது இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிற மொழி படங்களில் நடித்து வருகிறார்.
விஜய் தேவர்கொண்டா – ராஷ்மிகா நடித்த படங்கள்:
அதேபோல் விஜய் தேவேர்கொண்டாவும் தமிழ்,தெலுங்கு என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இன்றைய இளைஞர்களின் ஜோடியாக விஜய் தேவர்கொண்டா – ராஸ்மிகா திகழ்கிறார்கள். கடந்த 2007ஆம் ஆண்டு கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டிக்கும், ராஷ்மிகாவுக்கும் நிச்சயதார்த்தம் ஆகி இருந்தது. பின் 2018 ஆம் ஆண்டு இவர்கள் இருவருடைய திருமணம் நிச்சயதார்த்தத்தில் முடிந்துவிட்டது. உறவை முறித்துக் கொண்டதாக அறிவித்திருந்தார்கள். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.
இன்ஸ்டாகிராம் வீடியோ :
இந்த நிலையில் நடிகை ராஷ்மிகா புத்தாண்டின் போது இன்ஸ்டாகிராமில் நேரடி ஒளிபரப்பு நடத்தினார். இந்த நேரடி ஒளிபரப்பில் ரசிகர்கள் கேள்விக்கு ராஷ்மிகா மந்தனாவிடம் பல விதமான கேள்விகளை எழுப்பினார். இதற்கு பதிலளித்து கொண்டிருக்கும் போது பின்னணியில் ஒரு ஆணின் குரல் கேட்டது. இதற்கு ரசிகரகள் அது விஜய் தேவர்கொண்டாவின் குரல் தான் என்று சோசியல் மீடியாவில் பதிவிட்டு பலவிதமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
VD voice in the background😅😅#VIROSH #VijayDeverakonda #RashmikaMandanna
— Bharath (@Bharath__b) January 2, 2023
may be friends or may be something else 😜😜 pic.twitter.com/vYAraniND0
சோசியல் மீடியாவில் வைரல் :
இந்த மிகவும் முன்னர் கூட நீச்சலில் இருக்கும் போது விஜய் தேவர்கொண்டா பதிவிட்ட புகைப்படமும் ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட ஒரு புகைப்படமும் பார்ப்பதற்கு ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டதாக இருந்தது. இப்படிப்பட்ட நிலையில் நடந்த இந்த சம்பவம் சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்படுகிறது. ஆனால் இதுவரையில் ராஷ்மிகா மந்தனாவும் விஜய் தேவர்கொண்டாவும் தாங்கள் இருவரும் காதலிப்பதாக எந்த அதிகார பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடதக்கது.