என்னய்யா காசு, செத்தா அர்னாக்கயிற கூட அறுத்துடுவாங்க – கேப்டனின் பழைய வீடியோவை பகிர்ந்து கலங்கும் நெட்டிசன்கள்.

0
450
captian

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான, முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜயகாந்த். இவரை அனைவரும் கேப்டன் என்று தான் செல்லமாக அழைப்பார்கள். இவர் நடிகர் என்று சொல்வதை விட சிறந்த அரசியல்வாதி என்றும் சொல்வார்கள். நடிகர் விஜயகாந்த் அவர்கள் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் ஆவார். இவர் தன்னுடைய முழு கவனத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி வருகிறார். தற்போது இவருக்கு 67 வயது ஆகிறது. ஆனால், இப்போது கூட அவர் குழந்தை போன்று தான் நடந்து கொள்கிறார் என்று இவருக்கு நெருக்கமானவர்கள் சொல்வார்கள். இவர் இதுவரை தமிழ் மொழி படங்கள் தவிர வேறு எந்த மொழி படங்களிலும் நடித்து கிடையாது. நடிக்க வாய்ப்பு வந்தாலும் அந்த வாய்ப்பை இவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

இவருடைய படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. இவர் அதிகமாக படங்களில் போலீஸ் அதிகாரியாகவும், சமூக சேவைகளைச் செய்யும் கதாபாத்திரங்களில் தான் அதிகம் நடித்து உள்ளார். நடிகர் விஜயகாந்த் அவர்கள் முன்னாள் நடிகர் சங்கத்தின் தலைவரும் ஆவார். நடிகர் சங்கத்தின் பொறுப்பில் இருக்கும் போது இவர் சிறப்பாக நடத்தி வந்தார். முன் காலத்தில் இவரெல்லாம் ஒரு நடிகரா என்று கேலி செய்தவர்கள் முகத்தில் கரியைப் பூச செய்தவர். மேலும், நம்மைக் கிண்டல் கேலி செய்தவர்கள் முன்னாடி நன்றாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற குறிக்கோளுடன் வாழ்ந்தவர். நடிகர் விஜயகாந்த் அவர்கள் சினிமா உலகத்தை விட்டு அரசியலில் மாற்றத்தை உருவாக்க பல முயற்சிகளை செய்து வந்தார்.

- Advertisement -

ஆனால், இவருடைய உடல் நலக்குறைவு காரணமாக செய்ய முடியாமல் போனது. இவருக்கு எவ்வளவு சிகிச்சைகள் மேற்கொண்டது. ஆனால், இவரை பூரண குணம் செய்ய முடியவில்லை. பின் சிகிச்சைக்காக பல வெளிநாடுகளுக்கும் சென்றார்கள். ஆனால், அதுவும் பயன் அளிக்கவில்லை. ‘சாதாரண மனுஷனுக்கு தான் ஷாக்கடிக்கும், ஆன இந்த நரசிம்மாவ பார்த்த அந்த கரண்ட்டுக்கே ஷாக் கொடுக்கும்’ என்று வீரமாக இருந்த மனுஷனை இப்போது உடல் நிலை குன்றி பார்க்கும் போது கவலையாக உள்ளது என்று பலர் கூறுகிறார்கள். அந்த அளவிற்கு சினிமா உலகிலும், நிஜ வாழ்க்கையிலும் நல்ல பெயரை வாங்கியவர்.

இப்படி ஒரு நிலையில் நீண்ட மாதங்களாக பிரச்சாரத்தில் கலந்துகொள்ளாமல் இருந்த விஜயகாந்த், சமீபத்தில் பிரச்சாரத்தில் கலந்து கொண்டார். அப்போது பேசவே கஷ்டப்பட்ட அவர், தனது மனைவி பிரேமலதா சொன்னதை கேட்டு கேட்டு அதை அப்படியே சொன்னார். பின்னர் ஒரு கட்டத்தில் என்னால பேச முடியல, மழை வர மாதிரி இருக்கு பத்திரமா வீட்டுக்கு போங்க என்று தனது தொடர்களை பார்த்து சொன்னது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

-விளம்பரம்-

ஒருகாலத்தில் மேடைகளில் அனல் பறக்க பேசிய கேப்டனை இப்படி கஷ்டப்பட்டு பேசும் அளவிற்க்கு பார்க்கையில் பலரும் கொஞ்சம் நெகிழிச்சி அடைந்தார்கள். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவ, விஜயகாந்த் பேசிய பழைய வீடியோ ஒன்றை பலர் ஷேர் செய்து வருகின்றனர். அதில், எனக்குன்னு ஒரு இடம் இருக்கும்ல அது போதும், என்னய பணம் செத்தா அர்னாக்கயிற அறுத்து போட்டு போயிடுவான் என்று பேசியுள்ளார்.

Advertisement