சமீப காலமாகவே தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களாக ஜொலித்துக் கொண்டு இருக்கும் ஹீரோக்களின் படங்கள் பெரிய அளவில் வெற்றி அடையாததால் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆகவே லோகேஷ கனகராஜ் பதம் மூலம் ரசிகர்களின் எதிர்பார்ப்பு பூர்த்தி செய்யபடுமா? என்று ரசிகர் ஒருவர் போட்ட டீவ்ட் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் லோகேஷ் கனகராஜ். கடந்த 2017ம் ஆண்டு வெளியான மாநகரம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.
இவர் முதல் படத்திலேயே சினிமா உலகில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கார்த்திக் நடிப்பில் வெளிவந்த கைதி படத்தை இயக்கியிருந்தார். இந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. அதற்கு பின் இவர் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தளபதி விஜய் உடன் கூட்டணி அமைத்து மாஸ்டர் படத்தை இயக்கியிருந்தார். மேலும், மாஸ்டர் படத்தில் விஜய் மட்டுமில்லை மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் நடித்து இருந்தார்.
விக்ரம் படம் பற்றிய தகவல்:
இதனால் படம் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தது. தற்போது லோகேஷ் கனகராஜ் அவர்கள் கமலை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இறுதிகட்டத்தை நெருங்கி மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. கூடிய விரைவில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ரசிகர் ஒருவர் லோகேஷ் கனகராஜ்க்கு பதிவிட்ட பதிவு சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், சமீப காலமாகவே தமிழ் சினிமா உலகில் முன்னணி நட்சத்திரங்களாக நடித்துக்கொண்டிருக்கும் ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோரின் படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி கிடைக்கவில்லை.
தமிழ் சினிமா படங்களின் நிலைமை:
அந்த வகையில் சமீபத்தில் நீல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்து இருந்த படம் பீஸ்ட். இந்த படத்தில் ஒரு மால் லை பயங்கரமான தீவிரவாதிகள் ஹைஜாக் செய்கிறார்கள். அதிலிருந்து விஜய் மக்களை காப்பாற்றுவார் என்பது படத்தின் கதை. மொத்த கதையுமே ட்ரெய்லரில் நெல்சன் காண்பித்து விட்டதால் ரசிகர்கள் எதிர்பார்ப்புகலுக்கு ஒரு ஏமாற்றம் என்று சொல்லலாம். அது மட்டும் இல்லாமல் படம் ரிலீசான பிறகு கோபத்தில் ரசிகர்கள் சோசியல் மீடியாவில் பயங்கரமாக பீஸ்ட் படத்தையும் விஜய்யும் விமர்சித்து கமெண்ட்ஸ் போட்டு வருகிறார்கள்.
தமிழ சினிமை இயக்குனர் நிலைமை:
அதேபோல் அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் வெளிவந்த வலிமை படமும் கலவையான விமர்சனங்கள் பெற்றதே தவிர பெரிய அளவில் மக்கள் மத்தியில் ஈர்க்கபடவில்லை. பின் ரஜினிகாந்தின் அண்ணாத்த படமும் பயங்கர விமர்சனங்களை சந்தித்தது. . மேலும், சூர்யாவின் சூரரைப்போற்று ஜெய்பீம் படத்திற்கு பிறகு வெளிவந்த எதற்கும் துணிந்தவன் படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை இப்படி சமீபகாலமாகவே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. சங்கர், ஏ ஆர் முருகதாஸ் போன்ற புகழ்பெற்ற இயக்குனர்கள் எல்லாம் பிற மொழி படங்களை தேர்வு செய்து இயக்கி வருகிறார்கள்.
ரசிகர் ஒருவரின் பதிவு:
இதனால் தமிழ் சினிமாவின் தகுதி குறைந்து கொண்டே செல்கிறது. அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் வெளிவந்த ராம் சரண், என்டிஆரின் RRR படம், கன்னட படமான கேஜிஎப் 2 ஆகிய இரண்டு படங்களுமே ப்ளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. இதற்கிடையில் வெளிவந்த தமிழ் படங்கள் எல்லாமே பெரிய அளவு வெற்றி அடையவில்லை. இதனால் ரசிகர்கள் மனம் உடைந்து லோகேஷ் கனகராஜ் இடம் வேண்டுகோள் வைத்து கமெண்ட்ஸ் போட்டு வருகிறார்கள்.
லோகேஷ் கனகராஜின் ரியாக்ஷன் :
அதுஎன்னவென்றால், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது வெளியாகயிருக்கும் படம் விக்ரம். இந்த படமாவது ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும், உங்களை தான் நம்பி இருக்கிறோம், நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும், யோவ் ஏமாத்திடாதே என்றெல்லாம் ரசிகர்கள் லோகேஷ் கனகராஜ் குறிவைத்து கமெண்ட்ஸ் போட்டிருக்கிறார்கள். அந்த பதிவை லோகேஷ் கனகராஜூம் லைக் செய்து ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளார்.