விஜய்யின் குட்டி கதையை கண்டு கொள்ளாத அட்லீ. ஆனால், இதற்கு மட்டும் ட்வீட். கேள்வி கேட்டு குடையும் ரசிகர்கள்.

0
19460
atlee-vijay
- Advertisement -

தமிழ் சினிமா திரை உலகில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக இயக்குனர் அட்லி திகழ்ந்து வருகிறார். தற்போது அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளியாகி உள்ள திரைப்படம் தான் “பிகில்”. மேலும்,பிகில் படம் உலகம் முழுவதும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பையும், வசூல் வேட்டையும் அள்ளித் தந்து வருகிறது. இதனைத்தொடர்ந்து விஜய்யின் பிகில் படம் ரசிகர்களிடையே வெறித்தனமாகி உள்ளது. இயக்குனர் அட்லீ அவர்கள் மதுரையை சேர்ந்தவர். இவர் சினிமா உலகில் இயக்குனர், திரைக்கதை, எழுத்தளார் என பல முகங்களைக் கொண்டவர்.

-விளம்பரம்-

ஆரம்ப காலத்தில் இயக்குனர் ஷங்கரிடம் துணை இயக்குனராக பணியாற்றி வந்தார் அட்லி. அவ்வளவு ஏன் ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் இறுதிக்காட்சியில் விஜய் ஒரு சிறுவனை அழைத்து ‘அட்லி இதனை ஆப்பரேட் செய் ‘என்பார் அந்த அளவிற்கு ஷங்கரின் செல்ல பிள்ளையாக இருந்தார் இயக்குனர் அட்லீ. ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்த தனது முதல் படத்திலேயே மாபெரும் வெற்றியைக் கண்டார், அதன் பின்னர் இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தது இளைய தளபதி விஜய் தான்.

இதையும் பாருங்க : பிக் பாஸ் போட்டியாளருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட வனிதா. கடுப்பில் கமன்ட் செய்யும் ரசிகர்கள்

- Advertisement -

இதுவரை நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ள அட்லியின் மூன்று திரைப்படங்கள் விஜயின் திரைப்படம்தான். மேலும், அட்லி எப்போதும் விஜய்யை தனது அண்ணன் என்று கூறிக்கொண்டு வருகிறார். ஆனால், சமீபத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் இருந்து ஒரு குட்டி கதை என்ற பாடல் வெளியாகி இருந்தது. இந்த பாடலை கேட்டு பல்வேறு பிரபலங்களும் பாராட்டி ட்வீட் செய்து இருந்தார்கள். ஆனால், அட்லி இது குறித்து எந்தவொரு ட்வீட்டையும் இதுவரை செய்யாமல் இருந்து வருகிறார். இதுகூட விஜய் ரசிகர்களுக்கு பிரச்சனையாக தோன்றவில்லை. ஆனால் விஜய் படத்தின் பாட்டிற்கு ட்வீட் செய்யாத அட்லி விக்னேஷ் சிவனின் படத்திற்கு ட்வீட் செய்திருப்பதுதான் விஜய் ரசிகர்களை கொஞ்சம் கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.

தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு பின்னர் விக்னேஷ் சிவன் தற்போது ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தை இயக்கி தாமே தயாரிக்க இருக்கிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா என்று பலர் நடிக்க உள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை விக்னேஷ் சிவன் வெளியிட்டிருந்தார். அந்த பதிவிற்கு வாழ்த்து தெரிவித்து அட்லி ட்வீட் செய்திருந்தார். ஆனால், அதே நாளில் வெளியான குட்டிக்கதை பாடலுக்கு அட்லி எந்த ஒரு வீட்டையும் செய்யவில்லை.

-விளம்பரம்-

இதையும் பாருங்க : விஸ்வாசம் படத்தில் வில்லன் மகளாக வந்த இவர் ஏற்கனவே இந்த ரஜினியின் படத்தில் நடித்துள்ளார். புகைப்படம் இதோ.

அவ்வளவு ஏன் காதலர் தினத்தன்று தான் விஜய்யின் குட்டி கதை பாடல் வெளியாகி இருந்தது அன்று தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு காதலர் தின வாழ்த்து தெரிவித்திருந்தார் அட்லி. ஆனால், விஜயின் குட்டிக்கதை பாடலை ரீட்வீட் கூட அட்லி செய்யவில்லை. இதனால் விஜய் ரசிகர்கள் பலரும் கடுப்பில் ஆழ்ந்துள்ளார்கள். மேலும், குட்டி கதை பாடல் குறித்து ஏன் இன்னும் எதுவும் சொல்லவில்லை என்று அட்லியை கேள்விகளால் துளைத்து எடுத்து வருகிறார்கள்

Advertisement