பிக் பாஸ் போட்டியாளருடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட வனிதா. கடுப்பில் கமன்ட் செய்யும் ரசிகர்கள்.

0
3825
Vanitha

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த ஆண்டு மிகவும் கோலாகலமாக நிறைவடைந்தது. 17 போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் முகென் முதலிடத்தையும் சாண்டி இரண்டாவது இடத்தையும் பெற்றிருந்தார்கள். இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமான சில போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். அந்த வகையில் பிரபல நடிகையான வனிதாவும் ஒருவர். இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வனிதா.

இது மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மூத்த மகள் தான் வனிதா என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மாபெரும் ஹிட்டடித்ததற்கு இரண்டு காரணம் தான் என்று சொல்லலாம். அதில் ஒன்று வனிதா மற்றொன்று கவின் மற்றும் லாஸ்லியாவின் காதல். இடையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வனிதா சென்றபிறகு நிகழ்ச்சியின் சுவாரசியம் குறைந்து விட்டது. இதனால் இவரை மீண்டும் வைல்ட் கார்டு போட்டியாளராக களம் இறக்கினார்கள்.

இதையும் பாருங்க : விஸ்வாசம் படத்தில் வில்லன் மகளாக வந்த இவர் ஏற்கனவே இந்த ரஜினியின் படத்தில் நடித்துள்ளார். புகைப்படம் இதோ.

- Advertisement -

அந்த அளவிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி ஆதிக்கம் செலுத்தினார் வனிதா. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இவர் அடிக்கடி விஜய் டிவிக்கு விசிட் அடித்து வந்தார். அதுபோக தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு வருகிறார் வனிதா. இந்த நிலையில் வனிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சேரனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, நீண்ட இடைவேளைக்கு பின் என் அண்ணாவை சந்தித்தேன் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த புகைப்படத்தை கண்ட பலரும் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.

-விளம்பரம்-

மேலும், இவருடன் ஏன் புகைப்படத்தை எடுத்து போடுகிறீர்கள் என்றெல்லாம் கமெண்ட்களை அள்ளி வீசி வருகிறார்கள். அதில் பெரும்பாலானோர் கவிலியாவின் ரசிகர்கள் தான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த போது கவின் மற்றும் லாஸ்லியாவின் காதலுக்கு எதிரியாக இருந்தார் என்று கவிலியா ரசிகர்கள் தற்போது வரை புலம்பி வருகிறார்கள். இதனாலேயே கவின் லாஸ்யா ரசிகர்களுக்கு சேரன் மீது மிகுந்த கடுப்பு இருந்து வந்தது. இதனால்தான் வனிதா, சேரனை சந்தித்தது பிடிக்காமல் கமெண்ட் செக்ஷனில் கவிலியா ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.

Advertisement