‘விவேக் ஓபராய், நீங்களா’ கேலிக்கு உள்ளான செல்வராகவனின் ரோல் – முதல் படத்திலேயே மீம் மெட்டிரியலாக மாறிய சோகம்.

0
968
selva
- Advertisement -

சமீபத்தில் வெளியான பீஸ்ட் படத்தின் ட்ரைலரில் செல்வராகவனின் ரோலை கண்டு ரசிகர்கள் அப்சட் அடைந்து உள்ளனர். தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே பாக்ஸ் ஆபீஸில் இடம்பெறும். கடைசியாக விஜய்யின் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருந்தது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் பீஸ்ட் என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தில் அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து இருக்கிறார். தற்போது இந்த படத்தின் இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றது. மேலும், இந்த படத்தின் இரண்டு பாடல்களும் வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

- Advertisement -

பட்டையை கிளப்பும் ட்ரைலர் :

மேலும், இந்த பாடலும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டும் இல்லாமல் விஜய்யின் பீஸ்ட் படம் வருகிற ஏப்ரல் 13 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் நேற்று வெளியாகி இருந்தது.

இந்த படம் முழுக்க ஷாப்பிங் மாலில் நடைபெறும் கதை தான் என்பது ஏற்கனவே தெரியவந்துவிட்டது. இப்படி ஒரு நிலையில் படத்தின் ட்ரைலர் அதை உறுதி செய்து இருக்கிறது. சொல்லப்போனால் இந்த படத்தின் ட்ரைலரை வைத்தே இந்த படத்தின் முழு கதையும் ஓரளவிற்கு தெரிந்துவிட்டது. ஆனால், நெல்சன் இந்த படத்தை எப்படி கையாண்டு இருப்பார் என்பதே இந்த படத்தில் மிச்சம் இருக்கும் எதிர்பார்ப்பு.

-விளம்பரம்-

விஜய்க்கு நிகராக எதிர்பார்க்கப்பட்ட செல்வா :

பொதுவாக நெல்சன் படத்தின் போஸ்டர்களுக்கும் படத்திற்கும் சம்மந்தமே இருக்காது. உதாரணத்திற்கு டாக்டர் படத்தை சொல்லலாம். அந்த படம் போஸ்டர் மற்றும் ட்ரைலர் வெளியான போது இருந்த ஒரு எண்ணத்தை படத்தை பார்க்கும் போது அப்படியே எதிராக மாறியது. ஆனால், பீஸ்ட் படத்தில் விஜய்யை அடுத்து இந்த படத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது செல்வராகவனின் ரோல் தான்.

நடிகராக நடிக்கும் முதல் படம் :

செல்வராகவன் தற்போது ‘சானிக்காகிதம்’ படத்தில் லீட் ரோலில் நடித்து வந்தாலும், ஒரு நடிகராக செல்வராகவன் நடித்துள்ள முதல் படம் ‘பீஸ்ட்’ தான். இதனால் ஜினியஸ்ஸின் ரசிகர்கள் செல்வராகவனின் கதாபாத்திரத்தை மிகவும் எதிர்பார்த்தனர். ஆனால், ட்ரைலரை பார்த்து ரசிகர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். இந்த படத்தில் அவர் வில்லனாக நடிப்பார் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்தனர்.

வச்சி செய்யும் நெட்டிசன்கள் :

ஆனால், அவரோ இந்த படத்தில் கதை சொல்லும் ஒரு நபராக தான் இருப்பது போல தெரிகிறது. அதிலும் ட்ரைலரில் இவர் விஜய் குறித்து கொடுக்கும் பில்ட்டப்பை வைத்து பார்க்கும் போது விவேகம் படத்தில் அஜித்துக்கு பில்ட்டப் கொடுத்த விவேக் ஓபராயின் ரோல் தான் நினைவிற்கு வருகிறது. இதனால் நேற்றில் இருந்தே பீஸ்ட் படத்தில் செல்வராகவன் கதாபாத்திரத்தை கலாய்த்து பலரும் மீம்களை போட்டு வருகின்றனர்.

Advertisement