தமிழ் சினிமாவில் இசையில் ராக் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் அனிருத் ரவிச்சந்திரன். தன்னுடைய இளம் வயதிலேயே இசையின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். இவர் இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என பன்முகங்களை கொண்டு உள்ளார். இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொடங்கி சினிமாவில் பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களுக்கு இசை அமைத்து உள்ளார். என்னதான் இவரது இசைக்கு பல ரசிகர்கள் இருந்தாலும் அடிக்கடி இவர் எதாவது சர்ச்சையில் சிக்கிவிடுகிறார்.
இவர் பல நடிகைகளுடன் நெருக்கமாக இருக்கும் பல புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும் தன்னை விட வயதில் பெரிய நடிகையான ஆண்ட்ரியாவுடன் இவர் லிப் லாக் அடித்த புகைப்படம் பல ஆண்டுக்கு முன்னரே வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது.
இப்படி ஒரு நிலையில் தற்போது zomato விவகாரத்தால் அனிருத்தின் பெயரும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தமிழ் நாட்டை சேர்ந்த விகாஸ் என்பவர் சொமேட்டோவில் உணவு ஆர்டர் செய்துவிட்டு, ஆர்டர் செய்த உணவு முழுவதுமாக கிடைக்கவில்லை என்றதும் சொமேட்டோ ஆப் மூலம் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
அப்போது வாடிக்கையாளர் சேவை மையத்தில் பேசிய பெண் தேசிய மொழி ஹிந்தி. இது அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். தயவு செய்து இந்தி மொழியை கற்றுக் கொள்ளுங்கள் என்று கூறி இருந்தார். இந்த செய்தி சமூக வலைதளத்தில் வைரலாக பரவ பலரும் சொமேட்டோ நிறுவனத்தை கழுவி ஊற்ற பின் மன்னிப்பு கேட்ட சொமேட்டோ, அந்த பெண் ஊழியரையும் பணி நீக்கம் செய்தது.
இதனால் சொமேட்டோவின் பங்குகள் மல மலவென சரிந்தது. இப்படி ஒரு நிலையில் இந்த விவகாரத்தை தொடர்ந்து அனிருத்தின் சொமேட்டோ விளம்பர வீடியோவை எடுத்துக்கொண்டு ரசிகர்கள் பலரும் அனிருத்திற்கு சொமேட்டோ விளம்பரத்தில் நடிப்பதை நிறுத்துங்கள் என்று அறிவுரை கூறி வருகின்றனர். மேலும், உங்கள் இசைக்கு நாங்கள் ரசிகர்கள் தான் ஆனால், இது போன்ற நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிப்பதை நிறுத்துங்கள் என்று கூறி வருகின்றனர்.