பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பாதி பேருக்கு ரசிகர்கள் மத்தியில் கேட்ட பெயரே உருவாகியுள்ளது. அதில் ரசிகர்களின் விமர்சனத்தில் இருந்து தப்பி வருவது ஒரு சிலரே. அதில், சாண்டி, தர்ஷன், சரவணன் ஆகியோரை சொல்லலாம். ஆனால், சேரன் குறித்து பாத்திமா சில திடுக்கிடும் விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் போட்டியாளராக பாத்திமா பாபு குறைவான வாக்குகளை பெற்று பிக் பாஸ் வீட்டில் இருந்து கடந்த ஞாயிற்றுகிழமை (ஜூலை 8 )வெளியேற்றபட்டார். நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதற்கு முன்பாக போட்டியாளர்கள் பற்றிய தனது கருத்தை தெரிவித்தார் பாத்திமா.
பிக் பாஸ் வெளியேறுவதற்கு முன்பாக சேரன் குறித்து பேசிய பாத்திமா, சேரன், தான் ஒரு இயக்குனர் என்பதை நினைவில் வைத்துக்கொண்டு தான் இருக்கிறார். அதனால் தன்னுடைய மாறியதை கேட்டு விட கூடாது என்று தெளிவாக இருக்கிறார். எதையும் பேசாமல் கையை கட்டுக்கொண்டு வந்து விடுகிறார்.
இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பாத்திமா, சேரன் லாஸ்லியாவுடன் நடந்து கொள்ளும் விதம் குறித்து கூறியுள்ளார். அதில், ‘உங்க பொண்ணாவே இருந்தாலும் லாஸ்லியாவை ஃபிசிக்கலா தொடாதீங்க சேரன். சொந்தப்பொண்ணாவே இருந்தாலும் இவ்ளோ தான் தொடணும்னு இருக்கு. கன்னத்தை பிடிச்சு அழுத்தி தேய்கிறது எனக்கு பிடிக்கல. நீங்க அப்பாவாவே பண்ணாலும் எனக்கு அதெல்லாம் பார்க்கவே சகிக்கல’ என்று தொடர்ந்து சேரனை எச்சரித்ததாகவும் ஆனால் சேரன் தனது போக்கை மாற்றிக்கொள்ளவே இல்லை என்றும் ஃபாத்திமா பாபு குற்றம் சாட்டியுள்ளார்.