தமிழ் சினிமாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான சுஜி லீக்ஸ் என்ற ஹேஷ்டேக்கிற்கு பிறகு தற்போது #metoo என்ற ஹேஷ்டேக் தான் சமூக தமிழ் சினிமாவில் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்த ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு பாடகி சின்மயி பிரபல கவிஞர் வைரமுத்து மீது வைத்துள்ள பாலியல் குற்றச்சாட்டை தொடர்ந்து பல்வேறு நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து கூறிவருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் பிரபல செய்தி வாசிப்பாளரும் நடிகையுமான பாத்திமா பாபுவும் #metoo ஹேஷ்டேகாள் சர்ச்சையில் சிக்கியுள்ளார். பாத்திமா பாபுவை திமுக தலைவர் ஸ்டாலின் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சில செய்திகள் கடந்த சில ஆண்டுகளாக கிசுகிசுக்கபட்டு வந்தது. ஆனால் இந்த குற்றச்சாட்டை பாத்திமா பாபு மறுத்து வந்தார்.

ஆனால், தற்போது #metoo ஹேஷ்டேக் மிகவம் வைரலாக பரவி வரும் நிலையில் பாத்திமா மற்றும் ஸ்டாலின் வைத்து பல மீம்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வந்தது. அதில் ஒரு சில மீம்களில், பாத்திமா பாபு தனது குற்றச்சாட்டை தெரிவித்துவிட்டால், ஒரு கட்சியையே காலி செய்துவிடலாம் என்றும், எத்தனை ஆண்டுகள் கழித்து புகார் கொடுத்தாலும் இப்போது எடுத்துக்கொள்கிறார்கள் மேடம் என்று பாத்திமாவின் புகைப்படத்தை பதிவிட்டு சில மீம்கள் பரவி வந்தது.

Advertisement

இதனால் உண்மையில் ஸ்டாலின், பாத்திமாவிற்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தறா என்று பலரும் சமூக வளைத்தளத்தில் விவாதித்து வந்தனர். இந்நிலையில் பாத்திமா பாபு இந்த சர்ச்சை குறித்து தனது முகநூல் பக்கத்தில் விளக்கமளித்துள்ளார். அதில் இப்படியொரு சம்பவம் நடக்கவில்லை என்பதை இந்த வதந்தி உருவான ஆண்டிலிருந்தே என்னிடம் விளக்கம் கேட்ட பலரிடமும் நான் வீக்கமளித்து விட்டேன். எனக்கு இது வரை யாரும் பாலியல் தொல்லை கொடுத்து இல்லை.எனவே, இதுபோன்ற தவறான மீம்களை பரப்பி வருபவர்கள் மீது என்னால் சட்ட ரீதியாக வழக்கு தொடர முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
Advertisement