தமிழ் நாட்டை தமிழகம் என்றால் சரியாக இருக்கும் என்ற ஆளுநர் ரவி பேச்சுக்கு தமிழ் நாட்டில் பல பிரபலங்கள் மற்றும் அரசியல் காட்சிகள் வன்மையாக கண்டித்து மற்றும் நிலையில் இதற்கு கருத்து கூறியுள்ளார் பிரபல சன்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் உத்திர பிரதேச மாநிலத்தில் “காசி தமிழ் சங்கமம்” நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் நாட்டை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

ஆளுநர் உரை :

இந்த நிலையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த்தை கௌரவிக்கும் வகையில் சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கடந்து கொண்டு பேசும் போது பிரதமர் மோடியினால் தான் இந்த காசி தமிழ் சங்கமம் நடந்தது என்றும் காசி தமிழ் சங்கமம் என்பது ஒரு வரலாற்று நிகழ்வு என்று கூறினார். மேலும் விடுதலை போராட்டத்தில் போது பல்வேறு பிரிவினைகள் நம்மிடம் இருந்தது இப்போது ஒரே பாரதம், பாரதம் என்பது ரிஷிகள் மற்றும் ஆன்மீக இலக்கியங்களால் உருவாக்கப்பட்டது என கூறினார்.

Advertisement

தமிழகம் என்பதுதான் சரியான :

மேலும் ஆங்கிலேயர்கள் நம்மை பிரிக்க முயற்ச்சி செய்த்தனர். இந்தியாவில் குறிப்பாக தமிழ் நாட்டில் வித்தியாசமான அரசியல் சூழ்நிலை நிலவுகிறது. இங்கு எதிர்மறை அரசியல் நடத்தப்படுகிறது. இந்தியா என்பது ஒரே நாடுதான். ஆனால் பலர் அமெரிக்காவை போல பல தேசங்கள் என்று எண்ணுகிறார்கள். தமிழர்கள் தங்களை திராவிடர்களாக எண்ணிக்கொள்கின்றனர். தமிழ் நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொன்னால் சரியாக இருக்கும் என்று கூறினார் ஆளுநர்.

தமிழகமா? தமிழ்நாடா? :

இந்த நிலையில் ஆளுநர் தமிழ் நாட்டை தமிழகம் என்று குறை வேண்டும் என சொல்லியதற்கு அரசியல் பிரபலங்கள் முதல் சினிமா நடிகர்கள் வரையில் கடுமையான கண்டணங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இது குறித்து தமிழ் நாடு தான் நான் கூறுவேன் என்றதும், கமல்ஹாசன் ஆறு மொழிகளில் தமிழ் நாடு வாழ்க என பதிவிட்டது சோசியல் மீடியாவில் வைரலானது. மேலும் ட்விட்டர் பக்கத்தில் தமிழ் நாடா? தமிழகமா? என ட்ரெண்டாகி இருந்தது. இந்த நிலையில் தான் இது குறித்து பிரபல சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் கருத்து கூறியுள்ளார்.

Advertisement

கனல் கண்ணன் கூறியது :

அவர் கூறுகையில் இது தமிழ் நாடு மட்டும் கிடையாது இந்து நாடு. இது திராவிட நாடு கிடையாது. தமிழக முதலமைச்சர், தமிழக போலீஸ் என்று முன்னர் சொல்வதில்லையா. அதே போல வல்ல நாடு, ஓரத்த நாடு போன்ற பெயரில் ஊர்கள் இருக்கின்றன. அப்படி நாடு என்றால் அது தனி நாடாகிடுமா?. நாங்கள் தமிழ் நாடு என்று கூறினால் நீங்கள் திராவிட நாடு என கூறுவீர்கள், இப்போது நாங்கள் தமிழகம் என்று கூற நீங்கள் தமிழ் நாடு என்று சொல்லிவிடீர்கள் இதுதான் எங்களுடைய பிளான் என்று கூறினார் சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன்.

Advertisement
Advertisement