போன் தொலஞ்சி போச்சா பிரச்சனை இல்லை.! கூகுள் மேப் இருக்கு கண்டு பிடிச்சிடலாம்.!

0
1835
- Advertisement -

தற்போதுள்ள நவீன உலகத்தில் நம் அனைவரிடமும் ஸ்மார்ட் போன் இல்லாமல் இருக்காது. அதிலும் தற்போதுள்ள இளசுகள் மத்தியில் குறைந்தது பத்தாயிரம் ரூபாய்க்குக்கு கிழ் ஸ்மார்ட் போனை வாங்குவதே இல்லை. நாம் புதிய ஸ்மார்ட்போன் வாங்கி விட்டோம் என்று மகிழ்ச்சியில் இருப்போம்.

-விளம்பரம்-

ஆனால், சில நாட்களில் அந்த ஸ்மார்ட்போன் திருட்டு போய் விட்டால், அவ்வளவு தான் நமக்கு வாழ்கையே வெறுத்து போய் விட்டது போல் இருக்கும்.மேலும் நாம் தொலைந்த மொபைலை தேடி அலைந்தாலும் நமக்கு போலீசாரிடம் நிச்சயம் பதில் கிடைக்கும் என்பது சந்தேகமே.

- Advertisement -

இதில் ஏராளமான இளைஞர்கள் போலீசாரை நம்மாபால் களத்தில் இறங்கி குதித்து ஸ்மார்ட்போனை மீட்டும் திருடனையும் ஒப்படைத்துள்ளனர். இது எல்லாருக்கு முடியாத காரியமே. இதற்கு ஓர் எளிய தீர்வை காணலாம். சரி, அதை எவ்வாறு கண்டுபிப்பது என்பதை பார்க்கலாம். ஸ்மார்ட்போனில் கூகுள் மேப் கட்டாயம் இருக்கும் இதன் மூலம் போன் தொலைந்து விட்டாலும் எளிமையாக கண்டுபிடிக்கலாம்.

கூகுள் மெப்பை மொபைல் அல்லது டெஸ்க் டாப்பில் ஓபன் செய்து, தொலைந்து போன மொபைலில் பயன்படுத்திய கூகுள் அக்கவுண்ட் மூலம் லாக்-இன் செய்யவும். ஆப்ஷன்ஸ் பகுதிக்கு சென்று Your Timeline என்பதை தேர்வு செய்துகொள்ள வேண்டும். பிறகு எந்த தேதியிலிருந்து உங்கள் மொபைலின் இருப்பிட வரலாற்றை பார்க்க வேண்டும் என்பதை குறிப்பிட வேண்டும். இப்போது தேர்வு செய்த தேதியிலிருந்து உங்கள் மொபைல் எங்கெல்லாம் நகர்கின்றது என மேப்பில் தடதம் ஒன்றின் மூலம் காட்டப்படும். தற்போது உள்ள இடமும் தெரிந்துவிடும்.

-விளம்பரம்-
Advertisement