பின்னணி பாடகர் அந்தோனி தாசனின் மகள் தற்போது கல்லுரி படிப்பை முடித்து பட்டம் பெற்றுள்ளார். இது குறித்து புகைப்படங்களை வெளியிட்டார் பாடகர் அந்தோனி தாஸ். தமிழ் சினிமாவில் பல்வேறு பின்னனி பாடகர்கள் இருந்து வருகின்றனர் ஆனால் ஒரு சில பாடகர்களின் குரல்கள் தான் நம் மனதில் நிலைத்து நிற்கும். அதிலும் குறிப்பாக ஒரு சில நாட்டுபுற பாடகர்களின் குரல் நம் மனதில் கேட்டுகொண்டே இருக்கும். அப்படி பட்ட ஒருவர் தான் பாடகர் அந்தோனி தாஸ். இவர் நாட்டுபுற கலையே தனது உயிராக கொண்டிருக்கிறார்.

அந்தோனி தாஸ் திரைப் பயணம்:

தமிழ் சினிமாவில் திண்டுக்கல் சாரதி என்னும் படத்தில் திண்டுகல்லு திண்டுக்கல்லு என்ற பாடலில் கிரேஸ் கருணாஸ் உடன் இணைந்து பாடியதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின் அவர் பல்வேறு படங்களில் பாடல்களை பாடினாலும் அவருக்கு காசு பணம் துட்டு மணி மணி என்ற சூது கவ்வும் படத்தின் பாடல் அவருக்கு திருப்பு முனையாக அமைந்தது. அதன் பின் விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள திரைப்படத்தில் “யார் என்ன சொன்னாலும் யார் என்ன செஞ்சாலும் சொந்தமும் பந்தமும் கூட வரும்” என்ற பாடலின் மூலம் பல மக்களின் சொந்தங்களில் இவரும் ஒரு அங்கமாக மாறினார்.

Advertisement

இந்த பாடல் ஒலிக்கப்படாத குடும்ப நிகழ்வுகள் இல்லை என்றும் கூறலாம். இவரின் ஆரம்ப காலத்தில் வறுமையின் காரணமாக திருவிழாக்களில் பபூன் வேஷம் அணிந்தும், நாடகங்களில் இவர் குறவன் குறத்தி வேடமும் அணிந்து வந்துள்ளார். அப்போது இவருடன் பணியாற்றிய ரீட்டா என்ற பெண்மணியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர் தற்போது விஜய் டிவியில் வெளியாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராகும் இருந்து வருகிறார். இவர் குரலில் வெளி வந்த காத்து வாக்குல ரெண்டு காதல் திரைபடத்தில் இடம்பெற்ற “அம்சம அழகா ஒரு பொண்ணு பார்த்தேன்” பாடல் பட்டிதொட்டி எங்கும் பரவியது.    

அந்தோனி தாஸ் உருக்கமான பதிவு:

கான்வென்ட் காலேஜ் என்ற கல்விசாலைகளை காணாத என் வாழ்வில் என் மகள் பட்டம் வென்றுள்ளார் அது எனக்கு பேரானந்தம் என்றும் கூறியிருந்தார். மேலும் கடவுளுக்கு நன்றி என்றும் அந்த பதிவில் கூறிப்பிட்டு இருந்தார். தான் கஷட்டப்பட்டு படிக்க வைத்தார் அந்தோனி தாஸ் என்றும் அவரை புகழ்ந்து வருகின்றனர்.                     

Advertisement
Advertisement