முதல் முறையாக தன் குட்டி தேவதையின் போட்டோவை வெளியிட்ட நிவின் பாலி ..!

0
852
nivin-pauly

மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் நிவின் பாலி. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நேரடி தமிழ் படமான மிர்ச்சி என்னும் படத்தில் நடித்தார்.ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை.

பிரேமம் படத்தில் நடித்த போது இவர் தாடி வைத்துக்கொண்டு அளவான உடலுடன் மிகவும் அழகாக தோற்றமளித்து அணைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தார்.அந்த படத்தை பார்த்துதான் பல இளைஞர் பட்டாலங்கள் தாடி வைத்துக்கொண்டு பிரேமம் கெட்டப் என்று சுற்றித்திரிந்து கொண்டிருந்தனர்.

2010 ஆம் ஆண்டு ரினா ஜாய் என்பவரை திருமணம் செய்து கொண்ட நடிகர் நிவின் பாலிக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. அவர் அவ்வப்போது தன் மகன் செய்யும் சேட்டைகளை புகைப்படம் எடுத்து அடிக்கடி வெளியிட்டு வருவார்.

ஆனால் இதுவரை தனது மகள் “ரோஸ் திரேசா ” புகைப்படத்தை நிவின் பாலி வெளியிடாமல் இருந்தார். இந்நிலையில் நேற்று(மே 26 ) தனது மகளின் முதல் பிறந்தநாளை முன்னிட்டு தனது மகளின் குயூடான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதனை கண்ட ட்விட்டர் வாசிகள் உங்கள் மகள் இவ்வளவு குயூட்டா என்று நினைத்து வருகின்றனர்