ரோஹித் ஷர்மா இதுவரை 84 டீ20 போட்டிகளில் விளையாடி 2086 ரன்களை குவித்துள்ளார். இந்த தொடரில் 185 ரன்களை அடித்தால் டீ20 தொடரில் அதிக ரன்களை அடித்த மார்ட்டின் குப்திலின் சாதனையை முறியடிப்பார். நியூஸிலாந்து அணியை சேர்ந்த மார்டின் குப்தில் 75 போட்டிகளில் விளையாடி 2271 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஷிகர் தவான்:
இந்திய அணியின் தொக்க ஆட்டக்காரரான இவர், நாளை துவங்க இருக்கும் போட்டியில் 23 ரன்கள் அடித்தால் சர்வதேச டீ20 போட்டிகளில் தனது 1000 ரன்களை பூர்த்தி செய்து இமாலய சாதனையை படைப்பார்.
பும்ரா :
இதுவரை 35 டீ20 போட்டிகளில் விளையாடியுள்ள பும்ரா 43 விக்கெட்டுகளை பெற்றுள்ளார். இன்னும் 7 விக்கெட்டுகள் பெற்றால் டீ20 போட்டிகளில் 50 விக்கெட்களை வீழ்த்திய பெருமையை பெறுவார்.இந்தியா அணியின் அஸ்வின் மட்டுமே டீ20 தொடரில் 46 போட்டிகள் விளையாடி 52 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
ரோஹித் ஷர்மா :
இந்த தொடரில் சிறப்பாக விளையாடி வரும் ரோஹித் ஷர்மா 84 டீ20 போட்டிகளில் விளையாடி 89 சிக்சர்களை அடித்துள்ளார். இன்னும் 11 சிக்சர்களை அடித்தால் டீ20 தொடரில் 100 சிக்சர்களை அடிக்கும் முதல் இந்தியா வீரர் என்ற பெருமையை பெறுவார். இந்த பட்டியலில் சர்வதேச அளவில் நியூஸிலாந்து வீரர் மார்ட்டின் குப்தில் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் ஆகியோர் மட்டுமே 100 சிக்சர்களை அடித்துள்ளனர்.




