தமிழ் சினிமா உலகில் என்னென்றும் சாக்லேட் பாயாக திகழ்பவர் நடிகர் மாதவன். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான ‘அலைபாயுதே’ படம் மூலம் தான் மாதவன் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். ரொமான்டிக் படமான இது சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்ப்பை பெற்றது. சொல்லபோனால் நடிகர் மாதவனுக்கு இந்த படம் தான் சினிமா வாழ்க்கையில் ஒரு நல்ல துவக்கமாக இருந்தது. நடிகர் மாதவன் பேட்டிகளில் பங்கேற்றால் கூட ஒரு பெரிய நடிகரை போல இல்லாமல் மிகவும் எளிமையாக பேசக்கூடியவர் அதேபோல சமூகவலைதளத்தில் கூட ரசிகர்கள் கேட்கும் எந்த கேள்விக்கும் பதில் அளிக்கக் கூடியவர் நடிகர் மாதவன்

சமீபத்தில் ரசிகர் ஒருவர் மாதவனுக்கு ட்வீட்டரில் கேள்வி ஒன்றை கேட்டிருந்தார். அதில் Rehnaa Hai Terre Dil Mein (மின்னலே படத்தில் இந்தி ரீ -மேட்) படத்தின் காட்சி ஒன்றை பதிவிட்டு ”இந்த படம் வெளியாகி 19 ஆண்டுகள் ஆகிவிட்டது. தற்போது இதை நாங்கள் கொண்டாடி வருகிறோம். ஆனால் இந்த படம் வெளியான நாள் முதல் தற்போது வரை இந்த இடத்தினை மும்பையில் தேடிக்கொண்டிருக்கிறோம். இந்த காட்சி மும்பையில் எந்த இடத்தில் எடுக்கப்பட்டது என்று சொல்லமுடியுமா ? தயவுசெய்து எனக்கு தெரியப்படுத்துங்கள் உங்களை கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவிட்டிருந்தார்.

Advertisement

ரசிகரின் இந்த கேள்விக்கு பதிலளித்த மாதவன் இது தென் ஆப்பிரிக்கா சகோதரர் உண்மையில் ஜோகன்ஸ்பர்க் என்று கூறியிருந்தார். இதை பார்த்த தமிழ் ரசிகர் ஒருவர் நீங்கள் ரீல் மற்றும் ரியல் இரண்டிலும் பொய் கூறுபவர் தான். தமிழில் இந்த காட்சி எங்கே எடுக்கப்பட்டது சென்னையிலா அல்லது வேறு எங்காவது ? இதற்கெல்லாம் மேலாக இது மும்பை இல்லை என்று தெரிந்து கொண்டது நல்லது என்று கூறியிருந்தார்.

இந்த பதிவிற்கு கீழே மற்றொரு டுவிட்டர் வாசி ஒருவர் இந்தி மக்களுக்கு பதில் கூறுவது போல தமிழ் மக்களுக்கு இவர் பதில் கூறி நான் எப்போதும் பார்த்ததில்லை. அவர் சொந்த மொழியை மறந்து விட்டார் என்று நினைக்கிறேன். கொஞ்சம் வருத்தமாக இருக்கிறது. இவருக்கு தமிழில் கூட நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று கூறி இருந்தார். ரசிகர்களின் இந்த விமர்சனத்திற்கு பதில் அளித்த மாதவன் ”இதற்கு பதிலளித்த மாதவன் கண்டிப்பாக நான் எதையும் மறக்கவில்லை என்று கோபமுடன் இருக்கும் ஒரு எமோஜிக்களையும் தட்டியிருக்கிறார்.

Advertisement

மாதவனின் இந்த பதிவுகளை கண்ட ரசிகர்கள் ‘நீங்கள் இதற்கெல்லாம் விளக்கம் கொடுக்க வேண்டிய அவசியம் கிடையாது உங்களைப் பற்றி எங்களுக்குத் தெரியும்’ உங்கள் மீது எப்போதும் எங்களுக்கு அன்பு இருக்கிறது’ நீங்கள் எங்களை எப்போதும் மறக்க மாட்டீர்கள் என்று மாதவனுக்கு ஆதரவாக டுவிட் செய்து வருகிறார்கள். இதற்கெல்லாம் மேலாக மாதவன் நன்றாக தமிழ் பேசினாலும் அவர் ஒரு பீகாரி என் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement