விஜய் சேதுபதி மகளுக்கு ஆதரவாக பேசிய சின்மயிக்கு வந்த கேவலமான பாலியல் மிரட்டல். அதற்கு அவர் கொடுத்த பதிலடி.

0
2140
chinmayi
- Advertisement -

அதே போல பாரதி ராஜா, அகத்தியன், சேரன், சீனு ராமசாமி என்று பல்வேறு இயக்குனர் கூட விஜய் சேதுபதியை இந்த படத்தில் இருந்து விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். முத்தையா முரளிதரன் கூட விஜய் சேதுபதி இந்த படத்தில் இருந்து விலக வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டு இருந்தார். முத்தையா முரளிதரனின் இந்த அறிக்கைக்கு பதிலளித்த நடிகர் விஜய் சேதுபதி, “நன்றி.. வணக்கம்” எனக் கூறி இருந்தார். இது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு ‘அந்த படம் அவ்வளவு தான் முடிந்துவிட்டது’ என்று கூறி இருந்தார் விஜய் சேதுபதி.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜய் சேதுபதி 800 படத்தில் நடிக்க எதிர்ப்பு தெரிவிப்பதாக என்னை சமூக வலைதளத்தில் ஒரு மர்ம நபர், விஜய் சேதுபதியின் மகளுக்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்து இருந்தார். இது குறித்து சின்மயி பதிவிட்டுள்ளதாவது ”கருத்து வேறுபாடை தெரிவிக்கும் ஒரு தமிழ் மகன். அதான் சமுதாயத்தில் இருக்கும் பாலியல் குற்றவாளிங்களுக்கு support a நிக்கிறாங்க இந்த ஊர்ல. இந்த சிஸ்டமில் இருக்கும் யாராவது இதை மாற்றிவீர்களா ? பொது இடத்தில் ஒரு குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்துவிடுவேன் என்று ஒரு நபர் செல்வது குற்றம் என்று கூறி இருந்தார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் விஜய் சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்த அந்த நபருக்கு எதிராக பேசியதால் பாடகி சின்மயிக்கும் ஒரு நபர் பாலியல் மிரட்டலை விடுத்துள்ளார். அதில் ”சின்மயி உங்களுக்கு என்ன பிரச்சனை ? ஒரு தமிழினத்துரோகியின் மகளை செய்ய மாட்டோம் ஆனால் உனக்கு செய்வோம் எவ்வளவு rate பேசு வாறோம். என்று மிகவும் கேவலமாக பேசி இருந்தார். அதற்கு பதில் அளித்த சின்மயி ‘உன் யோக்கியதை உன் கலாச்சாரம் என்னனு நல்லா தெரியுது. நேர்ல வா பேசிக்கலாம்’ என்று பதில் அளித்துள்ளார்.

மேலும், இப்படி ட்வீட் பண்ணுனா பெரிய்ய ஆம்பளன்னு நெனப்பு போல. சோஷியல் மீடியால பதிவு பண்றேன் பெருவாழ்வேன்னு வற்ற முக்காவாசி ஆண்கள் இந்த லட்சனம் தான். சுட்டிகாட்டினா மட்டும் பொத்துக்குட்டு கோவம் வரும். எவனெல்லாம் ஏன் கரோனா தூக்கல?என்று பதில் அளித்தார், அதற்கு அந்த நபர், உங்களின் றேட் கேட்க்க இவ்வளவு கோபம் வருது என்றால்! 35 வருடமாக எங்கள் வயது வேறுபாடு என்று பாராமல் கற்பலித்த சிங்கள இனத்திற்க்கும் முரளிக்கும், விஜய்சேதுபதிக்கும் ஆதரவாக நிற்க்கும் உங்களுக்கு பெண்களை பற்றி கதைக்க என்ன உரிமை உண்டு? என்று கூறி உள்ளார்.

-விளம்பரம்-

அதற்கு சின்மயி, நீ எங்க இருந்தாலும் படு விறைவில் துடிச்சு சாக வாழ்த்துகள். மேலும், பெண்களுக்கு பாலியல் மிரட்டல்களை விடும் நபர்களுக்கு எதிராக ட்விட்டர் எப்போது நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறியுள்ளார் சின்மயி. இது குறித்து உங்கள் கருத்தென்ன.

Advertisement