‘அடியே குந்தாணி சோறு நீ போடுவியா’ என்று மஞ்சுமா மோகனை விமர்சித்த நெட்டிசன். வைரலாகும் டீவ்ட்..

0
42398

தற்போது ஒட்டுமொத்த உலகத்தையும் அச்சுறுத்தி வைத்து இருக்கும் ஒரே ஒரு விஷயம் இந்த கொரோனா வைரஸ். சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் தொடங்கிய இந்த கொரோனா தற்போது உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் பரவி உள்ளது. இதனால் லட்சக்கணக்கான பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்து உள்ளார்கள். இந்த கொரோனா வைரஸினால் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா வைரஸ் தாக்குதலால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த கொரோனாவினால் அதிகம் பாதிப்படைந்தது இத்தாலி நாடு என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளதால் அனைத்து சினிமா தியேட்டர்கள், மால்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளது. இந்த வைரஸ் தாக்கிய நபரை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். தற்போதைக்கு இருக்கும் ஒரே மருந்து அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது மட்டும் தான். இந்தியாவில் இதுவரை 10 பேர் இறந்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் சினிமா பிரபலங்கள், நெட்டிசன்கள், ரசிகர்கள் என அனைவரும் கொரோனா வைரஸ் குறித்து தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகை மஞ்சிமா மோகன் பதிவிட்ட கருத்து தற்போது கிண்டலும், கேலியுமாக மாறியுள்ளது. சமீபத்தில் தான் நடிகை மஞ்சிமா மோகன் அவர்கள் கொரோனா வைரஸ் குறித்து டீவ்ட் போட்டிருந்தார்.

-விளம்பரம்-

அதை பார்த்து சிலர் கிண்டலடித்து இருந்த நிலையில் மஞ்சிமா மோகன் தற்போது ஒரு டீவ்ட் போட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, ஏன் சொல்வதைக் கேட்காமல் வெளியில் செல்கிறீர்கள். வீட்டிலேயே தங்கி தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள். அது தான் உங்களுடைய நலனுக்கு நல்லது என்று கூறியிருந்தார். இதைப் பார்த்த நெட்டிசன் ஒருவர் ‘அடியே குந்தாணி சோறு நீ போடுவியா’ என்று பயங்கரமாக விமர்சித்துள்ளார். அதற்கு மஞ்சிமா மோகன் அவர்கள் கூறியிருப்பது, பொதுவாக நான் இந்த மாதிரி விஷயத்திற்கு பதில் அளிப்பதில்லை.

எங்களுக்கு மட்டும் பணம் என்ன வானத்தில் இருந்து கொட்டுகிறத என்று கூறியிருந்தார். உடனே மற்றொருவர், நீங்கள் வீட்டிலேயே இருங்கள் என்று கூறுகிறீர்களே கடன், இஎம்ஐ போன்ற பல விஷயங்கள் எப்படி கட்டமுடியும். அன்றாடம் கூலி வேலை செய்து தான் அவர்களால் பல பிரச்சனைகளை சமாளிக்க முடியும். இந்த நேரத்தில் வெளியில் செல்பவர்களை குறை சொல்லாதீர்கள். அவர்களுக்கு பல பிரச்சனைகள் இருக்கிறது. அதனால் தான் வெளியில் செல்கிறார்கள் என்று கூறியிருந்தார்.

இதனை பார்த்து மஞ்சிமா மோகன் கூறியிருப்பது, எங்களுக்கு மட்டும் இஎம்ஐ, கடன் எல்லாம் இல்லையா? நாங்கள் அதை வெளிக்காட்டிக் கொள்வது இல்லை. மனிதாபிமானமும், மனிதத்துவம் தான் முக்கியம். யாரும் உயிர் விஷயத்தில் தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்காதீர்கள் என்று கூறியிருந்தார். இப்படி மஞ்சிமா மோகன் போட்ட டீவ்ட் சோசியல் மீடியாவில் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான ” அச்சம் என்பது மடமையடா” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். இவர் மலையாளம் ,தெலுங்கு ,தமிழ் என பல மொழி திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

Advertisement