அஜித் வீட்டில் வனத்துறையினர் சோதனையா? வனத்துறை அதிகாரி அளித்த விளக்கம்.

0
6430
ajith

தல அஜித் வீட்டில் வனத்துறையை சேர்ந்த அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளதாக தகவல் வந்து உள்ளது. இது குறித்து சென்னை வனச்சரகர் மோகன் கருத்து தெரிவித்து உள்ளார். தற்போது இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி ட்ரெண்டிங்காக போய் கொண்டு உள்ளது. தமிழ் சினிமா உலகில் அல்டிமேட் ஸ்டார் ஆக வலம் வருபவர் தல அஜித். இந்த வருடம் தல அஜித் அவர்களின் நடிப்பில் வெளி வந்த “விசுவாசம், நேர்கொண்ட பார்வை” ஆகிய இரண்டு படமுமே மக்களிடையே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டும் இல்லாமல் இந்த இரண்டு படமுமே இந்த வருடம் பிளாக் பஸ்டர் படங்கள் என்றும் சொல்லலாம். மேலும், நேர்கொண்ட பார்வை படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனி கபூர் இருவருமே இணைந்து மீண்டும் தல அஜித்தை வைத்து மற்றொரு படம் ஒன்றை உருவாகி வருகிறார்கள்.

சுரேஷ் சந்திரா
அஜித் மேனேஜர் சுரேஷ் சந்திரா

அந்த படத்திற்கு “தல 60” என்று முதலில் பெயர் வைத்து பின் “வலிமை” என்று பெயர் வைத்து அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்கள். மேலும், வலிமை படத்தின் பூஜைகள் எல்லாம் முடிந்து படத்தின் படப்பிடிப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. அது மட்டும் இல்லாமல் நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய குழுவினரே இந்த வலிமை படத்திலும் பணியாற்றுவதாக கூறப்படுகிறது. வலிமை படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் தீவிரமாக நடை பெற்று வருகிறது. இந்த படம் ஆக்ஷன், அதிரடி சண்டை காட்சிகள் கொண்ட கதைக்களத்துடன் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதற்கான காட்சிகள் தான் தற்போது எடுக்கப்பட்டு உள்ளது.

- Advertisement -

இந்த படத்தில் தல அஜித் அவர்கள் வேற லெவல் இருப்பதால் அவருடைய படப்பிடிப்பின் காட்சிகள் எல்லாம் ரகசியமாக எடுக்கப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் திருவான்மியூரில் உள்ள பகுதியில் தான் தல அஜித் வீடு உள்ளது. தற்போது தல அஜித் வீட்டை வனத்துறையை சேர்ந்த அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளார்கள் என்றும், அஜித்தின் உதவியாளர் 3 அடி நீளம் மலைப்பாம்பை வைத்திருப்பதாகவும் தகவல் வந்ததாக செய்திகள் வெளிவந்தது. ஆனால், இதெல்லாம் உண்மை இல்லை. எந்த ஒரு சோதனையும் நடக்கவில்லை. இது வெறும் வதந்தி என்று சென்னை வனச்சரகர் மோகன்  . இது ஒரு புறம் இருக்க வலிமை படத்தில் தல அஜீத் அவர்கள் காவல் துறை அதிகாரியாக நடிக்க உள்ளார் என ஏற்கனவே அறிந்த விடயம் தான்

Image result for ajith house

-விளம்பரம்-

மேலும், வீரம், விசுவாசம், விவேகம் போன்ற படங்களில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருந்த அஜித் அவர்கள் நீண்ட இடைவெளிக்கு பிறகு மிக இளமையான தோற்றத்தில் காட்சி அளிக்க போகிறார் என்றும் கூறுகிறார்கள். அதுவும் இந்த படத்திற்காக நடிகர் அஜித் அவர்கள் கடுமையான உடற்பயிற்சிகளை செய்து அழகான தோற்றத்தில் ஸ்லிம்மாக காட்சியளிக்க போகிறார் என்றும் கூறி வருகிறார்கள். இதனால் அஜித்தின் வலிமை படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பயங்கர எதிர்பார்ப்பு உள்ளது என்று கூட சொல்லலாம். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளதாக தெரிய வந்து உள்ளது. அதோடு வலிமை படத்தின் கதாநாயகி குறித்து தான் இன்னும் அதிகார பூர்வமாக எந்த தகவலும் வரவில்லை.

Advertisement