அதிமுக ஒன்றிய தலைவர் விவகாரம் கடந்த சில மாதங்களாகவே வெறும் சர்ச்சையாக இருந்து வருகிறது. அதிமுக தற்போது பிரிந்து கிடைக்கும் நிலையில் கடந்த ஜூலை மாதம் 11ஆம் தேதி நடந்த பொதுக்குழுவில் தான் இந்த பிரச்சனை தொடங்கியது. அதாவது இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுக்குழுவாள் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் அப்போது கட்சியில் இருந்த பன்னீர்செல்வம் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.

தள்ளுபடி செய்த நீதிமன்றம் :

இதனால் சர்ச்சையானது வெடித்து இருவரும் நீதிமன்றத்தில் சட்ட போராட்டத்தில் இறங்கினர். இந்நிலையில் அதிமுக பொது குழுவின் முடிவை எதிர்த்து பன்னீர்செல்வம் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்து இருந்தார். அந்த வழக்கு நேற்று முன்தினம் 23ஆம் தேதி நீதிமன்ற கண்காணிப்புக்கு வந்தது அதனை ஆய்வு செய்த நீதிபதிகள் ஓ.பி.எஸ் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Advertisement

தொண்டர்களை ஊக்கப்படுத்திய ஓ.பி.எஸ் :

இந்நிலையில் இந்த தீர்ப்பு வருவதற்கு முன்னரே பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்களுடன் தேனீ மாவட்டத்தில் பெரியகுளத்தில் உள்ள பண்ணை வீட்டில் தீவிர ஆலோசனை ஈடுபட்டார். அப்போது வழக்கு தமக்கு சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று சட்ட வல்லுனர்களுடன் கலந்துரையாடினார். மேலும் ஒருவேளை தீர்ப்பு தனக்கு எதிராக வந்தால் அதனை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்றும் தொண்டர்கள் இதனை நினைத்து மனம் சோர்ந்து விடக்கூடாது என்றும் உற்சாகப்படுத்தினார்.

அடுத்தடுத்து சோகம் :

இந்நிலையில் திண்டுக்கல்லில் நேற்று ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஒருவர் திருமணத்தில் கலந்து கொள்வதாக இருந்தார். ஆனால் அந்த திருமணத்தில் திடீரென தான் வரவில்லை என்றும் சில நாட்கள் கழித்து வந்து மணமக்களை சந்திப்பதாகவும் கூறிவிட்டார். ஏனென்றால் அவரது 95வயதாகும் தாயார் பழனியம்மாள் உடல்நிலை குறைவு காரணமாக தேனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

Advertisement

ஓ.பி.எஸ் தாய் மறைவு :

இந்நிலையில் மருத்துவமனையில் இருந்தும் உடல்நிலைய மோசமாகிக்கொண்டே சென்ற காரணத்தினால் அவரை வீட்டுத்திற்கு அழைத்து சென்றனர். இந்நிலையில் ஓ.பி.எஸ் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக அவரது இலலத்தில் உயிரிழந்தார். தன்னுடைய அன்னையின் மறைவை அறிந்த ஓ.பி.எஸ் உடனடியாக சென்னையில் இருந்து தன்னுடைய சொந்த ஊருக்கு சென்று இறுதிச்சடங்கை மேற்கொள்ள உள்ளார்.

மு.க ஸ்டாலின் இரங்கல் :

மேலும் அங்கு பல அதிமுக நிர்வாகிகளுகும், பிரபலங்களும் வர தொடங்க்கியுள்ளனர். இறுதிச்சடங்கில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என்பதினால் பாதுகாப்பு அங்கே பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ஓ.பி.எஸ் தாயின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதோடு மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் இன்று நேரில் சந்தித்து அஞ்சலி செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கடந்த 2021 ஆம் ஆண்டு தான் opsன் மனைவி விஜயலக்ஷ்மி காலமானர். இதனால் மனைவியும் இல்ல, கட்சியும் இல்ல, இப்போ அம்மாவும் இல்ல, இன்னும் எத்தனை சோதனை என்று ஓபிஎஸின் நிலையை கண்டு அவரது தொண்டர்களால் வருந்தி வருகின்றனர்.

Advertisement