சந்திராயன்- 3 நிலவில் தரை இறங்கியதை குறித்து இந்தியா முழுவதும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வந்தனர். அதற்காக உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகள் சம்பளம் குறித்து இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் கூறியுள்ளார். தற்போது இந்தியா முழுவதுமே சந்தோஷத்தில் கொண்டாடி வருகிறது. அதற்கு காரணம், சந்திராயன் 3 விண்கலம் தான். ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து சந்திராயன் 3 விண்கலம் நிலவிற்கு ஏவப்பட்டது.

இது சுமார் 40 நாள் பயணம் என்றே சொல்லலாம். நிலவின் தென் துருவத்தில் இன்று சந்திராயன் 3 விண்கலம் தரையிறங்கி இருக்கிறது. இது இந்தியா செய்திருக்கும் மிகப்பெரிய சாதனை என்று சொல்லலாம். நேற்று முன்தினம் அளவில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கப்பட்டது. இதனை இஸ்ரோ தலைவர் சோம்நாத் உறுதி செய்திருக்கிறார். மேலும், நிலவின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாக கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா செய்திருக்கிறது.

Advertisement

இது ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய விஷயம். இந்த நிகழ்வை தற்போது நாடே சந்தோஷத்தில் துள்ளி குதித்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த நிகழ்வு குறித்து பிரபலங்கள் பலரும் சந்தோஷத்தோடும் பெருமையோடும் இஸ்ரோவின் சாதனைக்கு வாழ்த்து கூறி பாராட்டி பதிவுகளை போட்டு பதிவிட்டு வருகிறார்கள். தற்போது அவர்களின் சம்பளம் எவ்வளவு இருக்கும் என்ற எண்ணம் அனைவரிடமும் எழுந்துள்ளது.

மாதவன் நாயர் கூறியது:

அவர் கூறுகையில் வளர்ந்த நாடுகளை ஒப்பிடும் போது இஸ்ரோவில் பணியிபுரியும் விஞ்ஞானிகளுக்கு5 மடங்கு சம்பளம் குறைவாகதான் இருந்து வருகிறது. இஸ்ரோ சார்பில் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கி ஆய்வை தொடங்கி உள்ளது. இதுகுறித்து இஸ்ரோ முன்னாள் தலைவர் மாதவன் நாயர் கூறியதாவது. நம்முடைய விஞ்ஞானிகளுக்கு 5 மடங்கு சம்பளம் குறைவாக தான் இருக்கிறது இருப்பினும் நம்முடைய விஞ்ஞானிகள் சாதனையை படைத்தது வருகின்றனர்.  

Advertisement

மேலும் வளர்ந்த நாடுகளை ஒப்பிடும் போது நம்முடைய விஞ்ஞானிகள் மிக குறைந்த செலவிலே சந்திராயன் 3 விண்கலத்தை நிலவின் தென் துருவத்திற்கு அனுப்பி உள்ளனர். இதற்க்கு அவர்கள் சம்பளம் குறைவாக பெறுவது தான் காரணம். இஸ்ரோ விஞ்ஞானிகள் யாரும் இங்கே கோடிஸ்வரனாக இருக்க வில்லை.

Advertisement

அவர்கள் அனைவரும் சாதாரண வாழ்வை தான் வாழ்ந்து வருகின்றனர். தங்களுடைய பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் முழு ஈடுபாடுவுடன் பணிபுரிந்து வருகின்றனர். இதனால் தான் இந்திய இந்தகைய சாதனையை புரிந்துள்ளது என்று முன்னாள் இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் கூறியுள்ளார்.      

Advertisement