தேர்தல் எந்த நேரத்தில் வந்தாலும் நாங்கள் சந்திக்க தயாராக இருக்கிறேன். அதற்கான பணிகளை தான் தற்போது மேற்கொண்டு வருகிறோம். வயதின் மூத்தவர்கள் காலில் விழுந்து வணங்குவது தவறு இல்லை ஆனால் தற்போது அமைச்சராவிலேயே இருக்கும் கே என் நேரு அவர்களும். எ வ வேலு  அவர்களும் சரி திமுக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களும் என் தம்பி இன்பநதி வந்தாலும்  அவருடைய கால்களில் நாங்கள் விழுவோம் என்று கூறுகிறார்கள்.

செல்லூர் ராஜூ கூறியது:

கலைஞர் வழியில் ஒரே நாடு ஒரே தேர்தலை நாங்கள் வரவேற்கிறோம். தேர்தல் எந்த நேரத்தில் வந்தாலும் நாங்கள் சந்திக்க தயாராக இருக்கிறேன். அதற்கான பணிகளை தான் தற்போது மேற்கொண்டு வருகிறோம். சனாதனம் குறித்து எங்கள் பொதுச்செயலாளரும் பற்றி நாங்களும் என்று பேசி உள்ளோம். திமுக அரசின் தவறுகளை மறைப்பதற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மூலம் சனாதனம் பற்றியும் ஒரு மதத்தை தரக்குறைவாக பேசி அது தற்போது இந்திய இந்தியா முழுவதும் அதைப் பற்றி பேசி வருகின்றனர். தற்போது தமிழ்நாட்டில் அனைத்து தில்லு முல்லுகளை மறைப்பதற்காக சந்தனத்தை பற்றி பேசி வருகிறார்.

Advertisement

ஒரு ஆளுங்கட்சியின் அமைச்சர்க்கு எந்த ஒரு பணியும் இல்லாமல் வைத்திருப்பது குறித்து சரியா என்று நீதிமன்றமே இந்த அமைச்சராக பணியாற்றுவது குறித்து முதலமைச்சர் கேள்வி கேட்டுள்ளது. மற்ற அமைச்சர்களுக்கு எல்லாம் என்ன ஆகும் என்ற நிலையில் முதல்வர் பயந்து கொண்டு இருக்கிறார். இது எல்லாம் மறைக்கத்தான் உதயநிதி அவ்வாறு சாதனத்தை பற்றி பேசுகிறார் என்று நம்முடைய பொதுச் செயலாளர் கூறுகிறார். அதையே தான் நாங்களும் வழிமொழிகிறோம். பத்திரிக்கையாளர்கள் திமுக கொள்கைக்காக உருவாக்கப்பட்ட கட்சி என்று உதயநிதி கூறியதை பற்றி கேள்வி கேட்டனர். அதற்கு பதில் அளித்த செல்லூர் ராஜூ 1999 ஆம் ஆண்டு இந்த கொள்கை எல்லாம் எங்கு சென்றது. அப்போது அதை ஒத்தி வைத்து விட்டார்களா?

அன்றைக்கு பாஜகவின் வாஜ்பாய் ஆட்சி அமர வைத்து திமுக தான் இவர்கள் கூட்டணியில் இருந்தால் அது சமதர்மம் அவர்கள் அவர்கள் கூட்டணியில் இல்லை என்றால் அது சனாதன தர்மமா? திமுக மக்களிடையே இரட்டை வேடம் போடுகிறது. இது திமுகக்காண கொள்கைக்கான பிரச்சாரம் கிடையாது. சிறுபான்மையினரின் ஓட்டுகளை பெறுவதற்காக செயல்படுத்தும் நாடகம். இன்றைய தமிழக மக்கள் ஆளுட்சியான திமுகவும் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்க தயாராக இல்லை. இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் அனைத்து ஜாதியினரும் அண்ணன் தம்பி போல பழகி வருகின்றனர்.  தற்போது இதைப் பற்றி பேசுகிறார் என்றால் தன்னுடைய தவறுகளை மறைப்பதற்காகவே இவ்வாறு பேசி வருகின்றனர்.

Advertisement

வயதின் மூத்தவர்கள் காலில் விழுந்து வணங்குவது தவறு இல்லை ஆனால் தற்போது அமைச்சராவிலேயே இருக்கும் கே என் நேரு அவர்களும். எ வ வேலு  அவர்களும் சரி திமுக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களும் என் தம்பி இன்பநிதி வந்தாலும்  அவருடைய கால்களில் நாங்கள் விழுவோம் என்று கூறுகிறார்கள். உள்ளாட்சித் துறையில் இன்றைக்கு நிதியை கொடுக்காமல் மாநகராட்சிகள் வெறும் கையில் முழத்தை அளந்து வருகிறார்கள். வருகின்ற வரி வருமானங்களை வைத்து வளர்ச்சி செய்யுங்கள் என்று சொன்னால் இங்கு இருக்கும் அனைவரும் மற்றும் ஆணையரும் எதுவும் செய்ய முடியாது இதற்கு முழுக்க முழுக்க தமிழக அரசுதான் காரணம் என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

Advertisement
Advertisement